நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

1 mins read
12219a41-23a1-4260-be85-bfd7a8dd8a0b
-

சென்னை: நடிகர் விவேக் மரணம் குறித்து மத்திய சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். அதை விசாரித்த ஆணையம், எட்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.