அமைச்சர்: பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிதாகும்

அமைச்சர்: பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிதாகும்

1 mins read
5165e73f-d2a2-4359-8b75-d95b36f08a35
-

சென்னை: பத்­தி­ரப்­ப­தி­வில் முறை­கே­டு­கள் நடப்­பது கண்­டு­பிடிக்­கப்­பட்­டால் சார்­ப­தி­வா­ளர் உட்­பட சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்­கும் மூன்று ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் என வணி­க­வரி, பத்­தி­ரப்­ப­தி­வுத்­துறை அமைச்­சர் மூர்த்தி எச்­ச­ரித்­துள்­ளார்.

மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் பத்­தி­ரப்­பதிவு நடை­மு­றை­கள் அனைத்­தும் எளிமை ஆக்­கப்­படும் என்­றார்.

கடந்த அதி­முக ஆட்­சிக் காலத்­தில் பத்­தி­ரப்­ப­தி­வில் பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­துள்­ள­தா­கக் குற்­றம்­சாட்­டிய அவர், இதற்­கான ஆதா­ரங்­கள் உள்­ள­தா­கக் கூறி­னார்.

"கடந்த சில ஆண்­டு­களில் மட்­டும் பல ஆயி­ரம் கோடி ரூபாய் சொத்­துக்­கள் முறை­கே­டாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அந்த முறை­கேடு­கள் நடந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் இருக்­கின்­றன.

"கடந்த 2016 முதல் 2021 வரை பத்­தி­ரப்­ப­தி­வுத் துறை­யில் வெளிப்­ப­டை­யா­கவே முறை­கே­டு­கள் நடந்­துள்­ளன. இவை குறித்து விரி­வான விசா­ரணை நடத்த உயர்­நி­லைக் குழு அமைக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் மூர்த்தி.

பத்­தி­ரப்­ப­திவு முறை­கேட்­டில் தொடர்­பு­டைய பிற துறை­யைச் சார்ந்­த­வர்­க­ளுக்கு ஏழு ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், பத்­தி­ரப்­ப­திவு நடை­மு­றை­கள் எளி­தாக்­கப்­ப­டு­வது அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­குமே பய­ன­ளிக்­கும் என்­றார்.