ரூ.4,500 கோடியில் ஒப்பந்தம், தகவல் மையம்

1 mins read
6ef7de92-987b-414b-90cf-fe8562e299d1
தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் சரக்கு கொள்கலன் முனையம் உள்ளிட்டவற்றை அமைப்பது தொடர்பாக அரபு நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் துறை­முக மேம்­பாடு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, குளிர்­ப­த­னக் கிடங்கு உள்­ளிட்ட வசதிகளை அமைப்­பது தொடர்­பாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் முன்­னி­லை­யில் அரபு நிறு­வ­னத்­து­டன் ரூ.2,000 கோடி மதிப்­பீட்­டில் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

அதேவேளையில், அம்­பத்­தூ­ரில் ஜப்பான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் 'என்டிடி குளோபல் டேட்டா சென்டர்ஸ் மற்றும் கிளவுடு இன்ஃப்ரா ஸ்டரக்சர்' நிறுவனத்தின் சார்பில் ரூ.2,500 கோடி மதிப்­பீட்­டில் தக­வல் தரவு மையத்தை அமைக்கும் பணி தொடர்பாக காெணாளி வழி முதல்­வர் அடிக்­கல் நாட்­டி­னார்.

இந்த மையத்தால் 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆக­மொத்­தம் ரூ.4,500 கோடியில் தமி­ழ­கத்­தில் வளர்ச்­சிப் பணிகள் வேகம் பெற உள்ளதாக இந்து தமிழ்திசை ஊட கத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

இது­தொ­டர்­பாக தமி­ழக அரசு செய்­திக்­கு­றிப்­பு வெளியிட்டுள்ளது.

அதில், "ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு நாடுகளைச் சேர்ந்த 'டி.பி.வேர்ல்டு' நிறு­வ­னம் மாநிலத்தின் தூத்­துக்­குடி, திரு­வள்­ளூர், சேலம், கோவை, ஈரோடு ஆகி­ய­ ஐந்து முக்­கிய மாவட்­டங்­க­ளில் ரூ.2,000 கோடி­யில் முத­லீடு செய்ய புரிந்துணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்திட்­டுள்­ளது.

"இத­னால், ஏராளமானவருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­க­வும் வர்த்­த­கங்­கள் பெரு­க­வும் வாய்ப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன," எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.