மகன் கையால் மாங்கல்யம் பெற்று மறுமணம் செய்த பேராசிரியை

மகன் கையால் மாங்கல்யம் பெற்று மறுமணம் செய்த பேராசிரியை

1 mins read
b8a5314d-4a00-441f-9320-8bdb8ee4be09
-

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கல்லூரிப் பேராசிரியை ஒருவர், தனது ஒன்பது வயது மகன் எடுத்துக் கொடுத்த திருமாங்கல்யத்தைப் பெற்று மறுமணம் செய்துகொண்டார்.

திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதிஷ். திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி. கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியையாக உள்ளார். இவருக்குத் திருமணமாகி, விவாகரத்து ஆகியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆதிஷ்-சுபாஷினி திருமணக் காெணாளி சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.