ரூ.1 நாணயத்தை விழுங்கிய சிறுவன்; அறுவை சிகிச்சையின்றி ெவளியே எடுத்த மருத்துவர்கள்

ரூ.1 நாணயத்தை விழுங்கிய சிறுவன்; அறுவை சிகிச்சையின்றி ெவளியே எடுத்த மருத்துவர்கள்

1 mins read
5471dcf1-da99-4c67-ab43-629db3702d2f
இடமிருந்து: சிறுவன் மிதுன்; எக்ஸ்ரேயில் மிதுனின் தொண்டையில் சிக்கிய நாணயம்; அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்ட நாணயம். படங்கள்: இந்து ஊடகம் -

திரு­வண்­ணா­மலை: ஒரு ரூபாய் நாண­யத்­தைக் கண்­டெ­டுத்த இரண்டு வயது சிறு­வன் ஒரு­வன், அந்த நாண­யத்தை வாயில் போட்டு சப்­பி­ய­படி விளை­யா­டிக்கொண்­டு இருந்துள்ளான். அப்போது, அந்த நாணயம் அவ­னது தொண்­டைக் குழி­யில் சிக்­கிக்­கொண்­டது.

திரு­வண்­ணா­மலை அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை மருத்­து­வர்­க­ளின் முயற்­சி­யால் நாண­யம் அறுவை சிகிச்­சை­யின்றி பக்­கு­வ­மாக வெளி­யே எடுக்கப் பட்டது.

திரு­வண்­ணா­ம­லையை அடுத்த எடப்­பா­ளை­யம் கிரா­மத்­தில் வசிக்­கி­றார் லோக­நா­தன். இவ­ரது மகன் மிதுன், நேற்று முன்­தி­னம் விளை­யா­டிக்கொண்­டி­ருந்­த­போது நாண­யத்தை விழுங்­கி­யுள்­ளான்.

பெற்­றோர் சிறு­வனை திரு­வண்­ணா­மலை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துக்கொண்டு ஓடினர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்­த­தில், தொண்டைப் பகு­தி­யில் (உண­வுக் குழாய் தொடங்­கும் இடத்­தில்) நாண­யம் சிக்­கி­யி­ருந்­தது தெரிந்தது.

இதைத்­தொ­டர்ந்து காது, மூக்கு, தொண்டை துறை­யின் தலைமை மருத்­து­வர் இளஞ்­செ­ழி­யன் மேற்­பார்­வை­யில் சிறப்பு மருத்­து­வக் குழு­வி­னர் சிறு­வ­னுக்கு மயக்க மருந்து செலுத்­தி­னர். அதன்­பி­றகு 'Laryngoscopy' முறை­யில் அறுவை சிகிச்­சை­யின்றி சிறு­வ­னின் தொண்டைக் குழி­யில் சிக்­கிய நாண­யத்தை மருத்துவர்கள் வெற்­றி­க­ர­மாக வெளியே அகற்­றி­னர்.

சிறு­வ­னின் உடல்­நிலை இயல்பு நிலைக்­குத் திரும்பிய நிலையில், பெற்­றோர் அவனை நேற்று வீட் டுக்கு அழைத்துச் சென்­ற­னர்.