ஆந்திராவில் இருந்து 120 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது

ஆந்திராவில் இருந்து 120 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது

2 mins read
378b85f3-ad99-437f-8cb1-05f0ba8167dd
கும்பகோணத்தில் தனிப்படை போலிசார் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஆறு பேர் உள்பட ஒன்பது போ் கைதாகினர். ஆந்திர பதிவு எண் கொண்ட கார்களில் 120 கிலோ கஞ்சா போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் மீது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. படம்: தமிழக ஊடகம் -

கும்­ப­கோ­ணம்: தமி­ழ­கத்­தின் தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகை உள்­ளிட்ட ெடல்டா மாவட்­டங்­களில் விற்­பனை செய்­வ­தற்­காக, ஆந்­திர மாநி­லத்­தைச் சேர்ந்த கும்­பல் ஒன்று 120 கிலோ கஞ்சா போதைப்­பொ­ரு­ளைக் கடத்தி வந்­துள்­ளது.

தஞ்­சாவூா் மாவட்­டம், கும்ப கோணத்­தில் தனிப்­படை போலி­சா­ரின் வாக­னச் சோத­னை­யில் இக்­கும்­பல் வச­மா­கச் சிக்­கி­யது.

ஆறு பேரை­யும் கைது செய்த போலி­சார், 120 கிலோ கஞ்­சா­வுடன் அவர்­க­ளது இரண்டு கார்­க­ளை­யும் பறி­மு­தல் செய்­த­தாக தின­ம­லர் ஊட­கச் செய்தி கூறி­யுள்­ளது.

கைதான ஆறு பேரும் கொடுத்த தக­வலை அடுத்து, தமி­ழ­கத்­தில் கஞ்சா விற்­பனை மூலம் பெரும் பணம் சம்­பா­தித்து வந்த நாகை மாவட்­டத்­தைச் சேர்ந்த குஷ்பு என்­கிற அன்­புச்­செல்­வன் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து தனிப்­படை போலி­சார் கூறு­கை­யில், "ஆந்­திர மாநி­லம், விசா­கப்­பட்­டி­னத்­தில் இருந்து கார்­கள் மூலம் கஞ்சா போதைப்­பொ­ரு­ளைக் கடத்­தி­வந்த குட­பி­ர­தாப்­சந்த்,25, பத்ரி, 23, மகேஸ்­வ­ர­ராவ்,32, ரவி, 29, சந்­திரா, 27, அப்­பா­ராவ், 29, ஆகிய அறு­வ­ரை­யும் கைது செய்து 120 கிலோ கஞ்­சா­வு­டன் இரு கார்­க­ளை­யும் பறி­மு­தல் செய்­துள்­ளோம்.

"அவர்­கள் கொடுத்த தக­வ­லின் படி, முக்­கிய குற்­ற­வா­ளி­க­ளான நாகப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த அன்­புச்­செல்­வன், 39, சர­வ­ணன்,42, கௌதம், 31, ஆகி­யோ­ரை­யும் கைது செய்­தோம்.

"அவர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில், விசா­கப்­பட்­டி­னம் மலைப்­ப­கு­தி­யில் இரண்டு கிலோ கஞ்சா பொட்­ட­லத்தை ரூ.4,000 ரூபாய்க்கு வாங்கி வந்து டெல்டா மாவட்­டங்­களில் ரூ.22,000க்கு விற்­பனை செய்­த­தா­கக் கூறி­னர். விசா­ரணை தொடர்­கிறது,'' என்­ற­னர்.

தஞ்­சா­வூரில் கஞ்சா விற்­பனை கொடி­கட்­டிப் பறப்­ப­தாகவும் கட­லோ­ரப் பகு­தி­களில் இருந்து இலங்­கைக்கு கஞ்சா அதிக அள­வில் கடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தஞ்­சா­வூர் சரக டிஐஜி பிர­வேஷ்­கு­மா­ருக்­குத் தக­வல் வந்­ததை அடுத்து, ஒன்­பது பேர் அடங்­கிய கும்­ப­லும் போதைப்­பொ­ரு­ளும் பிடி­பட்­டுள்­ளன.