'நீட்' விலக்கு மசோதா நிறைவேறியது; அதிமுக ஆதரவு

1 mins read
26089e5b-f148-4af4-9626-653234ad5661
-

சென்னை: 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது.

அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த 'நீட்' விலக்கு மசோதா நிறைவேறிய நிலையில், அதிபரின் ஒப்புதலைப் பெற அரசு முடிவெடுத்துள்ளது.

ஆனால், இம்மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. 'நீட்' தேர்வால் பல நன்மைகள் உள்ளதாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் கூறியதை அடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.