அமைச்சர்: வாராவாரம் ஞாயிறன்று இனி தடுப்பூசி முகாம்கள் ெதாடர்ந்து நடத்தப்படும் ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

அமைச்சர்: வாராவாரம் ஞாயிறன்று இனி தடுப்பூசி முகாம்கள் ெதாடர்ந்து நடத்தப்படும் ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

2 mins read
1ad63df2-4a1a-4b6e-bf12-6ba0dcc24bea
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேலான அனைவரும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 188,080 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. படம்: ஊடகம் -

சென்ைன: தமி­ழ­கத்தில் கடந்த ஞாயிறன்று தடுப்­பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு வரு­கை­ய­ளித்த 28 லட்­சத்து 36 ஆயி­ரம் பேருக்கு ஒரே நாளில் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக முதல்வர் மு.க.ஸ்டா­லின் தெரிவித்துள்­ளார்.

இவர்களையும் சேர்த்து மாநிலத்­தில் இது­வரை தடுப்­பூ­சி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்­ணிக்கை 4.02 கோடியை எட்டி யுள்­ள­தா­க­வும் அவர் மேலும் கூறினார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின் மூன்­றாம் அலை அச்­சத்­தைத் தவிர்க்­க­வும் அன்­றாட கிரு­மித் தாக்­கத்­தில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்­க­வும் மாநி­லம் முழுவதும் 40,000 இடங்­களில் தடுப்­பூசி முகாம் நடத்­தப்­பட்­டது.

ஞாயி­றன்று நடத்­தப்­பட்ட முகாம்­களில் 20 லட்­சம் பேருக்குத் தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருந்­தது.

ஆனால், ஆகமொத்தமாக 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேருக்குத் தடுப்பூசி போட்டு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, தென்­காசி மாவட்­டத்தில் மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"தடுப்­பூசி முகாம்­க­ளால் எதிர்­பார்த்­ததை விட­வும் அதிகள­வில் நல்ல பலன் கிடைத்­துள்­ள­து. இனி, தமிழ்­நாட்­டில் வாரந்­தோ­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் இந்த தடுப்­பூசி முகாம்­கள் தொடர்ந்து நடை­பெ­றும். அதற்குத் தேவை­யான தடுப்­பூசியை மத்திய அர­சி­டம் இருந்து கேட்டுப் பெறவும் திட்­ட­மிட்டுள்ேளாம்," என்று அவர் குறிப்­பிட்டார்.

ஒரே நாளில் 28 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டிருப்பது இந்தியச் சாதனை! இதுவரை நான்கு கோடி தடுப்பூசி போடப்பட்டு இருப்பது இமாலயச் சாதனை! தடுப்பூசி போடாதவா்கள் போட்டுக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!

முதல்வா் மு.க.ஸ்டாலின்