ஆசிரியரை கடத்திய விவகாரம்: ஆறு காவலர்கள் மீது வழக்கு

சென்னை: திருச்­செந்­தூர் அருகே தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­ய­ராக இருந்த சால­மன் என்­ப­வ­ரைக் கடத்தி, நான்­கரை லட்­சம் ரூபாய் பணம் பறித்த சம்­ப­வம் மீண்­டும் சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த ஆண்டு நடந்த இச் சம்­ப­வம் தொடர்­பில், சென்னை வள­ச­ர­வாக்­கம் பெண் காவல் ஆய்­வா­ளர் அமுதா, உதவி காவல் ஆய்­வா­ளர் ரமேஷ் கண்­ணன் உள்­பட ஆறு பேர் மீது போலி­சார் வழக்­குப்­ பதிந்­துள்­ள­னர்.

தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் அருகே உள்ள குப்­பா­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர் அர­சுப் பள்ளி ஆசி­ரி­யர் சால­மன், 52.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் குப்­பா­பு­ரத்­துக்­குச் சென்ற வள­ச­ர­வாக்­கம் போலி­சார், "சாலமனைப் பார்க்கவேண்­டும். அவரை அழைத்து வாருங்­கள்," என்று சால­ம­னின் உற­வி­னர் ஒரு­வரிடம் சொல்லி ஊருக்கு வெளிப்புறம் வர­வ­ழைத்­துள்­ள­னர்.

அங்கு வேன் ஒன்­றில் காவல் ஆய்­வா­ளர் அமுதா, உதவி ஆய்­வா­ளர் ரமேஷ் கண்ணன், சென்­னை­யில் நிதி நிறு­வ­னம் நடத்தி வரும் சிவக்­கு­மார் நாயர் உள்­பட ஆறு பேர் இருந்­துள்­ள­னர்.

சால­மனை வேனுக்­குள் ஏற்­றிக்கொண்டு சென்னை நோக்கி அவரை அழைத்­துச் சென்­றுள்­ள­னர்.

"உன் தம்பி தேவ­ராஜ் என்னி டம் வாங்­கிய பணத்­தைத் திருப்­பிக் கொடுக்­க­வில்லை. உன்­னைத் தூக்­கி­னால்­தான் பணம் வரும்," என்று சால­ம­னி­டம் சிவக்­கு­மார் கூறி­ய­தாகச் சொல்­லப்­ப­டு­கிறது.

மறு­நாள் காலை சால­ம­னின் குடும்­பத்­தாரை மிரட்டி நான்­கரை லட்ச ரூபாய் பணத்­தைப் பெற்­ற­பின் அவரை விடு­வித்­துள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக உள்­ளூர் காவல்­நி­லை­யம் முதல் மாவட்­டக் காவல் கண்­கா­ணிப்­பா­ளர் அலு­வ­ல­கம் வரை புகார் அளித்­தும் காவல்­துறை எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்பதால், சால­மன் திருச்­செந்­தூர் மாஜிஸ்­தி­ரேட் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­தார்.

நீதி­மன்­றம் சம்­பந்­தப்­பட்ட காவல்­து­றை­யி­னர் அனை­வர் மீதும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு உத்­த­ர­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!