இரு மாநிலங்களவை பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

இரு மாநிலங்களவை பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

1 mins read
40e17a11-00f7-48ab-8b90-61415f17b76e
-

சென்னை: தமி­ழ­கத்­தில் காலி யாக­வுள்ள இரு மாநி­லங்­க­ளவை பத­வி­க­ளுக்­குத் திமுக சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர். அக்­டோ­பர் 4ல் இந்­தத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது.

இது­தொ­டர்­பாக திமுக தலைமை வெளி­யிட்­டுள்ள அறி விப்­பில், நடை­பெ­ற­வுள்ள மாநி­லங்­க­ளவைத் தேர்­த­லில் டாக்­டர் கனி­மொழி, என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஷ்­கு­மார் அகி யோர் வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக் கப்­பட்­டுள்­ள­னர்.

ஏற்­கெ­னவே காலி­யாக இருந்த ஒரு மாநி­லங்­க­ளவை இடத்­துக்கு தேர்­தல் அறி­விக்­கப்­பட்ட நிலை யில், திமுக சாா்பில் போட்­டி­யிட்ட எம்.எம்.அப்­துல்லா, மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக போட்­டி­யின்றி தேர்­வா­னார்.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தில் இரு மாநி­லங்களவை பத­வி­க­ளுக்கு தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதி­முக எம்.பி.க்க­ளாக இருந்த வைத்­தி­லிங்­கம், கே.பி.முனு­சாமி ஆகி­யோ­ரின் பதவி வில­க­லைத் தொடர்ந்து இந்த இடங்­கள் காலி­யா­கி­யுள்­ளன.