சென்னை: தமிழ்நாட்டின் 15வது ஆளுநராக வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்.என். ரவி பதவியேற்க உள்ளார். அவ ருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரி வித்துள்ளன.
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை பஞ்சாப் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், 1976ல் கேரள பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதி காரியாகவும் 2012ல் மத்திய உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 2019ல் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றாா். நாகாலாந்து ஆளுநரான ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக அதிபர் ராம்நாத் கோவிந்த் கடந்த வியாழனன்று நியமித்தார்.

