மரபணு பகுப்பாய்வு மையம் திறப்பு

மரபணு பகுப்பாய்வு மையம் திறப்பு

1 mins read
dcc2099f-5d9a-4bd5-b2f0-bc57edf0d254
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக பொது சுகாதாரத் துறையின் சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ேடார் கலந்துகொண்டனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை டி.எம்.எஸ். வளா­கத்­தில் தமி­ழக பொது சுகா­தா­ரத் துறை­யின் சார்­பில் ரூ. 4 கோடி செல­வில் அமைக்­கப்­பட்ட மர­பணு பகுப்­பாய்வு ஆய்­வ­கத்தை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று திறந்து வைத்­தார்.

உரு­மா­றிய கொரோனா தொற்று எந்த வகை­யைச் சேர்ந்­தது என்­பதை கண்­ட­றி­யும் ஆய்­வ­கங்­கள் தமிழ் நாட்­டில் இல்­லா­த­தால், அத­னைக் கண்­ட­றிய ஹைத­ரா­பாத் அல்­லது புனே­யில் உள்ள ஆய்­வ­கங்­க­ளுக்கு கொரோனா பாதித்­த­வர்­க­ளின் மாதி­ரி­கள் அனுப்­பப்­பட்டு வந்­தன.

இத­னால், சோதனை முடி­வு­களை பெறு­வ­தில் கால­தா­ம­தம் நில­வி­யது.

இந்­நி­லை­யில், தமிழ்­நாட்­டி­லேயே எந்த வகை கிரு­மித்­தொற்று என்ப தைக் கண்­ட­றி­யும் மர­பணு பரி சோதனை ஆய்­வ­கத்தை அமைக்க முதல்­வர் உத்­த­ர­விட்­டார்.

இதன்­மூ­லம் எந்த வகை­யான கொரோனா தொற்­றால் ஒரு­வர் பாதிக்­கப்­பட்­டுள்­ளார் என்­பதை 5 மணி நேரத்­தில் கண்­ட­றிய முடி­யும் என­வும் கூறப்­பட்­டுள்­ளது.

நேற்று இந்த மையத்தை முதல்­வர் திறந்து வைத்­தார்.

இந்நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­ மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "உருமாறிய கொரோனா கிரு­மித்தொற்று எந்த வகை­யைச் சேர்ந்­தது என்­ப­தைக் கண்­ட­றி­யும் ஆய்­வ­கங்­கள் தமிழ்­நாட்­டில் இல்­லா­த­தால் காலவிரையம் ஏற்பட்டு வந்தது. ஒரு மாதி­ரியை பரி­சோ­தனை செய்­வ­தற்கு ரூ. 4,000 அள­வி­லும் போக்­கு­வ­ரத்து செல­வோடு சேர்த்து ரூ.5,000 வரை செல­வா­கும் சூழல் இருந்­தது. இதனை கருத்­தில் கொண்டு தமிழ்­நாட்­டில் உரு­மாற்­றம் அடைந்த கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­யும் மர­பணு பரி­சோ­தனை ஆய்­வ­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது," என்றார்.