தேர்தல் ஆணையம்: இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்; அக்டோபர் 12ல் வாக்கு எண்ணிக்கை 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் ஆணையம்: இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்; அக்டோபர் 12ல் வாக்கு எண்ணிக்கை 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

2 mins read
a9720332-5912-49d3-b14e-b34dc0e1339b
ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் சென்னையில் வெளியிட்டார். ஆணையச் செயலர் எ.சுந்தரவல்லி, முதன்மை தேர்தல் அலுவலர்கள் கே.அருண்மணி, ஜி.தனலட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் ஒன்­பது மாவட்­டங்களுக்­கான ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல் இரு கட்டங்களாக நடத்­தப்­பட உள்­ள­தாக மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. அடுத்த அக்­டோ­பர் மாதம் 6, 9 ஆகிய தேதி­களில் வாக்­குப்­பதிவு நடை­பெற உள்­ளது.

இதற்­கான வேட்­பு­மனுத் தாக்­கல் இன்று தொடங்கி, செப்டம்பர் 22ல் முடிவு­பெ­றும் என்றும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்­பு­ம­னுக்­கள் பெறப்படும் என்றும் இந்து தமிழ் திசை ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

புதி­தா­கப் பிரிக்­கப்­பட்ட வேலூர், நெல்லை, விழுப்­பு­ரம், காஞ்­சி­பு­ரம், ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர், கள்­ளக்­கு­றிச்சி, செங்­கல்­பட்டு, தென்­காசி ஆகிய ஒன்­பது மாவட்­டங்­களி­லும் தேர்­தலை செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிப்பதற்கு உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்நிலையில், அண்ைமயில் இத் தேர்­தலை நடத்தி முடிக்க இன்னும் கொஞ்சம் கால அவ­கா­சம் வேண்டும் என உச்ச நீதி­மன்றத்தில் தமிழகத் தேர்­தல் ஆணை­யம் மனுத்தாக்­கல் செய்திருந்தது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்­தல் குறித்து மாநிலத் தேர்­தல் ஆணை­யர் வெ.பழனிகுமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "ஒன்பது மாவட்­டங்­க­ளிலும் அக்­டோ­பர் 6, 9 ஆகிய தேதி­களில் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்க உள்­ளது.

"மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா அறி­குறி உள்­ள­வர்­களும் கிருமித்தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் மட்­டுமே வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர். வாக்கு எண்ணும் பணி அக்டோபர் 12ல் நடக்க உள்ளது,'' என்றார்.

இதற்கிடையே, "வேட்பு மனுத் தாக்­க­லுக்கு ஏழு நாட்­களை மட்­டுமே தேர்­தல் ஆணையம் வழங்கி யுள்­ள­து. இதனால், திமுக, அதி­முக கட்­சி­க­ளு­டன் கூட்­டணி வைத்­தி­ருக்­கும் தோழ­மைக் கட்­சி­க­ளால் ஒரு நல்ல முடிவை எடுக்கமுடி யாமல் குழப்பத்துக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது," என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கருத்து தெரி வித்துள்ளனர்.