ஃபோர்டு நிர்வாகம் செயல்பட ஓபிஎஸ் கோரிக்கை

ஃபோர்டு நிர்வாகம் செயல்பட ஓபிஎஸ் கோரிக்கை

1 mins read
63899016-b03c-4c33-96da-47e06613ae11
-

சென்னை: மறைமலை நகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவன மான ஃபோர்ட் ஆலை பலகாலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் 4,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரமாக உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஃபோர்டு கார் நிறுவனம் வெளியேறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரி களுடன் முதல்வர் ஆலோ சனை நடத்தி வருகிறார்.