கூட்டிக் கழித்து கணக்கு போட்டு வரும் கட்சிகள்

2 mins read
d50969c3-7e4f-48f1-b9e3-aa6ed5c3f428
-

சென்னை: அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கைேகாத்த அதே கூட்டணி கட்சிகள் இந்த உள்­ளாட்சித் தேர்­த­லி­லும் போட்டி­யி­டுமா? அல்­லது தனித்துப் போட்­டி­யி­டுமா? கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து ஒவ்­வொரு கட்­சியினரும் மனக் கணக்­கு­களை கூட்­டிக் கழித்­துப் போட்டுப் பார்த்து வருகின்றனர்.

திமு­க­வி­ட­மி­ருந்து கணி­ச­மான இடங்­களைப் பெற்று போட்­டி­யிடவும் ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் குறைந்­த­பட்­சம் 10 முதல் 15% இடங்­களில் போட்­டி­யிடவும் விரும்புகிறது காங்­கி­ரஸ்.

ஆனால், திமுக தலை­மையோ அனைத்துக் கட்­சி­க­ளுக்­கும் 15% இடங்­களை மட்­டுமே விட்­டுக் கொடுத்து 85% இடங்­களில் போட்­டி­யிட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், திமுக தரப்பு கொடுக்­கும் இடங்­க­ளை­யும் எண்­ணிக்­கை­யை­யும் தோழ­மைக் கட்­சி­கள் பெற்­றுக்கொள்­வ­தாக இருந்­தால் கூட்­டணி நீடிக்­கும். இல்­லை யேல் கூட்­ட­ணி­யில் பிளவு வர­லாம் என்­கி­ன்றனர் திமுக கூட்­டணி கட்­சி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள்.

மற்றொரு பக்­கம், தேமு­தி­க­வுக்கு இப்­போ­துள்ள ஒரே வாய்ப்பு திமுக கூட்­ட­ணி­தான் என்பதால், தேமு­தி­க­ திமுகவுடன் கூட்­டணி அமைக்கலாம் எனத் ­தெ­ரி­கிறது.

வன்­னி­யர்­கள் வாக்கை முழு­வ­தும் அறு­வடை செய்யவேண்­டும் என்ற நோக்­கில் திமுக அரசு தொடர்ந்து செயல்­பட்டு வரு­கிறது.

திமு­க­வு­டன் கூட்­டணி அமைத்­தால் அதிக இடங்­களில் வெற்றி பெற­லாம் என்பது பாமகவின் கணிப்பாகவும் உள்ளது.

ஏற்ெகனவே திமுக கூட்­ட­ணி­யில் விடு­தலைச் சிறுத்­தை­கள் கட்சி இடம்­பெற்­றுள்­ள நிலையில், ஒரு­வேளை திமுகவை நோக்கி பாமக வந்­தால், தொல். திரு­மா­வ­ள­வன் திமுக கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யேற வாய்ப்­பு­கள் மிக அதி கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது திமு­க­வுக்கு பெரும் இழப்­பா­க அமைந்துவிடும். ஏனெனில், தலித் வாக்குகளைத் திமுக இழக்க நேரி­ட­லாம்.

மறு­பு­றம், அதி­முக கூட்­ட­ணி­யில் அதி­க அளவில் சல­ச­லப்­பு இருக்­காது எனவும் தெரி­கிறது. ஏனெனில், பாம­க­வுக்கு அதிக இடங்­கள் ஒதுக்க வாய்ப்புள்­ளது. அப்­படி வழங்காமல் போனால், பாமக திமுகவை நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்­ளது அல்­லது தனித்­துக்­கூட போட்­டி­யி­ட­லாம்.

உள்­ளாட்சித் தேர்­தல் நடை­பெ­றும் பல மாவட்­டங்­களிலும் வன்­னி­யர்­கள் பெரும்­பான்­மை­யாக உள்­ள­து குறிப்­பி­டத்­தக்­கது.