தங்குவிடுதி வழங்கக் கோரி கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தாதியர்கள் திடீர் போராட்டம்

சென்னை: கொவிட்-19 கிரு­மித் தொற்று தடுப்­புப் பணி­யில் ஈடு­படும் தாதி­யர் சிலர், தங்­க­ளுக்கு தங்­கு விடுதி வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து திடீர் ேபாராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

“எங்­க­ளது பணி கார­ண­மாக வாடகை வீடு­கள் எங்­க­ளுக்கு எளி­தில் கிடைப்­ப­தில்லை. சீருடையுடன் வரும் தாதி­யரைக் கண்டு ரயில்­கள், பேருந்­துப் பய­ணி­கள் முகம் சுளிக்­கும் நிலைமையும் உள்­ளது. ஒரு சிலர் எங்­கள் அரு­கில் நிற்க விரும்­பா­மல் தள்­ளிச் சென்று விடு­கின்­ற­னர்,” என்­றும் அவர்­கள் வேதனை தெரி­வித்­துள்­ள­னர்.

சென்னை கீழ்ப்­பாக்­கம் மருத்­து­வ­மனை­யின் கொரோனா வார்­டில் பணி­யாற்றி வரும் தாதியர், கீழ்ப்­பாக்­கத்­தில் உள்ள மருத்­து­வக் கல்வி இயக்­கு­நர் அலு­வ­ல­கத்­தில் ஆர்ப்­பாட்­டம் நடத்தி­னர்.

இந்த ஆர்ப்­பாட்­டம் குறித்து எம்­ஆர்பி கொவிட் தாதி­யர்­கள் கூட்­ட­மைப்­பின் மாநி­லப் பொதுச் செய­லா­ளர் ராஜேஷ் செய்­தி­யா­ளர் களி­டம் பேசி­னார்.

“கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­துவ மனை­யின் கொரோனா வார்­டு­களில் பணி­யாற்றுவதற்கு ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் தேர்­வா­ணை­யம் மூலம் பணி அமர்த்­தப்­பட்­டோம்.

“கடந்த டிசம்­பர் மாதம் எங்­க­ளது பணிக்­கா­லம் முடி­வ­டைந்­தது. இருப்­பி­னும், கொரோனா இரண்டா வது அலை­யின் தாக்­கம் தொடர்ந்து நீடித்ததன் கார­ண­மாக எங்­க­ளது பணிக்­கா­லம் நீட்­டிக்­கப்பட்டு பணி­யாற்றி வருகிறோம்.

“எனினும், எங்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்த விடுதி வசதிகளை இனி வழங்க முடி­யாது என மருத்­துவ நிர்­வா­கம் கூறி­யுள்­ளது.

“கொரோனா பணி­யில் ஈடு­ப­டு­ம் எங்களைப் போன்றவர்களால் வெளியே எங்­கும் எளி­தில் தங்க முடி­ய­வில்லை. எனவே, எங்களது பிரச்சினையில் அரசு உட­ன­டி­யாகத் தலையிட்டு எங்­க­ளுக்கு விடுதி வழங்­க­வும் தொகுப்பூதி­யம் வழங்­க­வும் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்,” என்று வலியுறுத்தி உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!