உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக, தேமுதிக முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக, தேமுதிக முடிவு

3 mins read
9a0b2bfb-4885-4e2e-8143-b75948bf2f91
-

சென்னை: தமி­ழ­கத்­தில் நடை­பெற உள்ள உள்­ளாட்­சித் தேர்­த­லில் பாம­க­வும் தேமு­தி­க­வும் தனித்துப் போட்­டி­யிட முடிவு செய்­துள்­ளன. பாம­க­வின் இந்த திடீர் முடி­வை­ அடுத்து அதி­முக தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில் பிளவு ஏற்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து பாமக தலை­வர் ஜி.கே.மணி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், கட்­சி­யின் வளர்ச்சி கருதி இந்­தத் தேர்­த­லில் தனித்துப் போட்­டி­யி­ட­லாம் என்று நிர்­வா­கி­கள் கருத்து தெரி­வித்­த­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தேமு­திக தரப்­பில் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பு­வோர் விருப்ப மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­ய­லாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஒன்­பது மாவட்­டங்­களில் உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்­ளது.

அக்­டோ­பர் 6ஆம் தேதி, 9ஆம் தேதி என இரு கட்­டங்­க­ளாக தேர்­தல் நடத்­தப்­படும் என மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து அர­சி­யல் கட்­சி­கள் மீண்­டும் தேர்­தல் களத்­தைச் சந்­திக்க வரிந்து கட்­டி­யுள்­ளன. உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளுக்­கான இடங்­களைப் பிரித்­துக்கொள்­வது தொடர்­பாக கூட்­ட­ணிக் கட்­சி­களுக்கு இடையே பேச்சு­வார்த்­தை­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

நடந்து முடிந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அதி­முக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றி­ருந்­தது பாமக. அக்­கட்­சிக்கு அதி­முக தலைமை கூடு­தல் முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தாக தேமு­திக தலைமை அதி­ருப்தி தெரி­விக்­கும் அள­வுக்கு இரு கட்சி­களும் நெருக்­கம் பாராட்­டின.

எனவே உள்­ளாட்­சித் தேர்­தலி­லும் கூட்­டணி நீடிக்­கும் என எதிர்­பார்க்்­கப்­பட்ட நிலை­யில், தனித்­துப் போட்­டி­யி­டப்போவ­தாக பாமக தலைமை அறி­வித்­துள்­ளது.

உள்­ளாட்­சித் தேர்­தல் தொடர்­பாக ஒன்­பது மாவட்­டங்­க­ளின் நிர்­வா­கி­க­ளு­டன் அக்­கட்­சி­யின் நிறு­வ­னர் மருத்­து­வர் ராம­தாஸ், இளை­ய­ர­ணித் தலை­வர் மருத்­து­வர் அன்­பு­மணி உள்­ளிட்­டோர் ஆலோ­சனை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது பெரும்­பா­லான நிர்­வா­கி­கள் தனித்­துப் போட்­டி­யி­ட­லாம் எனக் கருத்து தெரி­வித்­த­தாக ஜி.கே.மணி தெரி­வித்­துள்­ளார். எனவே கட்சி வளர்ச்­சி­யைக் கவ­னத்­தில் கொண்டு தனித்­துப் போட்­டி­யி­டும் முடிவை எடுத்­துள்­ள­தாக அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பும் பாம­க­வி­னர் விருப்ப மனுக்­களை உட­ன­டி­யாக அளிக்­க­லாம் என்­றும் உயர்­நிலைக் குழு மூலம் நேர்­கா­ணல் நடத்­தப்­பட்டு வேட்­பா­ளர்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­வர் என்­றும் ஜி.கே.மணி மேலும் கூறி­யுள்­ளார்.

பாமக வில­கி­யதை அடுத்து அதி­முக கூட்­ட­ணி­யில் தேமு­தி­க­வுக்கு முக்­கி­யத்­து­வம் கிடைக்க வாய்ப்­புண்டு என அர­சி­யல் நிபு­ணர்­கள் கருத்து தெரி­வித்த நிலை­யில், அக்­கட்­சி தனித்­துப் போட்­டி­யி­டும் என விஜ­ய­காந்த் அறி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே பாமக தலைமை சில கணக்குகளை முன்வைத்தே அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன.

அதி­மு­க­வு­டன் அந்த வாக்­கு­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள பாமக தலைமை விரும்­ப­வில்லை எனக் கரு­தப்­ப­டு­கிறது.

"அதி­முக ஆட்சி, செயல்­பாடு ஆகி­ய­வற்­றால் மக்­கள் மத்­தி­யில் நில­விய அதி­ருப்தி கார­ண­மா­கவே பாமக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பின்­ன­டை­வைச் சந்­திக்க நேர்ந்­த­தாக அக்­கட்சி நிர்­வா­கி­கள் கரு­து­கின்­ற­னர். எனவே உள்­ளாட்­சித் தேர்­த­லில் தனிப்­பட்ட செல்­வாக்­கு­டன் கள­மி­றங்­கி­னால் சாதிக்க முடி­யும் என­வும் நம்­பு­கின்­ற­னர். என­வே­தான் புதிய வியூ­கத்­து­டன் தேர்­த­லைச் சந்­திக்­கிறது பாமக," என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள்.

பாமக, தேமுதிக முடிவால் தேர்தல் களம் களைகட்டி உள்ளது.

பாமக தலைவர் மணி: கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு இது