தமிழக வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கல்; தீவிர தேடுதல் வேட்டை

தமிழக வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கல்; தீவிர தேடுதல் வேட்டை

2 mins read
cc55ebb7-a580-4ba5-a401-3fff9b7f590f
-

தேனி: தீவி­ர­வா­தி­கள் ஊடு­ருவி இருப்­ப­தாக கிடைத்­துள்ள தக­வ­லை­ய­டுத்து தமி­ழக, கேரள எல்லை­யில் உள்ள வனப்­ப­கு­தி­களில் தீவிர தேடு­தல் வேட்டை தொடங்கி உள்­ளது.

இது தொடர்­பாக தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் இரு மாநில எல்­லை­யோர கிரா­மங்­களில் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

கேரள வனப்­ப­கு­தி­யில் மாவோ­யிஸ்டு­கள் அண்­மை­யில் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர். இதற்­காக நடை­பெற்ற ரக­சி­யக் கூட்­டத்­தில் தமி­ழ­கத்­தில் இருந்­தும் பல மாவோ­யிஸ்டுகள் பங்­கேற்­ற­தா­கக் கூறப்­படு­கிறது.

இது­கு­றித்து தக­வல் அறிந்த கேரள காவல்­து­றை­ உட­ன­டி­யாக சந்­தே­கத்­துக்­கு­ரிய பகு­தி­யில் சோதனை மேற்­கொண்­டது. எனி­னும் யாரும் சிக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் திடீர் திருப்­ப­மாக தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­களும் இந்­தத் தேடு­தல் நட­வ­டிக்­கை­யி­லும் விசா­ர­ணை­யி­லும் இறங்கி உள்­ள­னர்.

மாவோ­யிஸ்டுக­ளுக்­கும் பாகிஸ்­தான் தீவி­ர­வா­தி­க­ளுக்­கும் இடையே தொடர்பு இருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டு­வ­தால் தேசிய புல­னாய்வு முக­மை­யும் கள­மி­றங்கி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சில தீவி­ர­வா­தி­கள் வனப்­ப­குதி­யில் பதுங்கி இருப்­ப­தாக தக­வல் கிடைத்­தி­ருப்­ப­தா­க­வும் அதன் பேரில் தீவி­ர­வா­தி­க­ளைப் பிடிக்க புல­னாய்வு முகமை வியூ­கம் வகுத்­துள்­ள­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

அம்­மு­க­மை­யின் எச்­ச­ரிக்­கையை அடுத்து, தமி­ழக எல்­லை­யோ­ரப் பகு­தி­க­ளான தேனி, கம்­பம் மலைப்­பா­தை­களில் தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்­டு, துப்­பாக்கி ஏந்­திய வீரர்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இதே­போல், கேரள எல்­லை­யில் அமைந்­துள்ள நெல்லை, தென்­காசி, கன்­னி­யா­கு­மரி, மதுரை, தேனி, கம்­பம், கோவை உள்­ளிட்ட மாவட்­டங்க­ளி­லும் காவல்­துறை கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது. பல்­வேறு இடங்­களில் தீவிர வாகன சோதனை நடை­பெ­ற்று வருகிறது.

காவல்­து­றை­யி­ன­ரும் சிறப்­புப் படை வீரர்­களும் தேடு­தல் நட­வடிக்கை­களில் ஈடு­பட்­டுள்ள நிலை­யில், தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­களும் விசா­ரணை வளை­யத்தை விரி­வு­ப­டுத்தி உள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.