தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நீட்' எதிர்ப்பு: சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்கிறார் முதல்வர்

2 mins read
b2432a14-5406-421a-a743-9ad9bd2d8284
-

சென்னை: தமி­ழக மாண­வர்­க­ளின் மருத்­துவ கனவைச் சிதைக்­கும் 'நீட்' தேர்வை தொடக்­கம் முதலே திமுக எதிர்த்து வரு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அதற்­கான சட்­டப் போராட்­டத்­தை­யும் முழுவீச்­சில் தொடங்கி இருப்­ப­தா­க­வும், நீட் தேர்வை நீக்க வேண்­டும் என்­ப­தில் எந்­த­வித சமரசத்­துக்­கும் இட­மில்லை என்­றும் அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்­சி­க­ளின் ஆத­ர­வு­ட­னும் ஒத்­து­ழைப்­பு­ட­னும் சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சட்ட முன்­வ­டி­வுக்கு அதி­ப­ரின் ஒப்­பு­த­லைப் பெற்று, 'நீட்' தேர்வை முழு­மை­யாக நீக்­கும் வரை சட்­டப் போராட்­டம் நீடிக்­கும் என்று முதல்­வர் ஸ்டா­லின் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சட்­டப் போராட்­டத்­தில் எவ்­வித சம­ர­ச­மும் கிடை­யாது என்ற உறு­தி­யினை மாண­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் வழங்­கு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

'நீட்' தேர்வு என்­பது தகுதியை எடை­போ­டும் தேர்­வல்ல என்­பதை ஆள் மாறாட்­டம், வினாத்­தாள் விற்­பனை, பயிற்சி நிறு­வன தில்­லு­முல்­லு­கள் உள்­ளிட்ட பல மோச­டி­கள் தொடர்ந்து அம்­ப­லப்­படுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள முதல்­வர் ஸ்டா­லின், கல்­வி­யில் சமத்­து­வத்­தைச் சீர்­கு­லைக்­கும் 'நீட்' தேர்வு நீக்­கப்­ப­டு­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளை­யும் தமி­ழக அரசு தொடர்ந்து மேற்­கொள்­ளும் எனத் தெரி­வித்­துள்­ளார்.

"மாண­வர்­க­ளின் எதிர்­கால வளர்ச்­சிக்­காக பல பயிற்சி வகுப்பு­க­ளுக்கு அனுப்­பும் பெற்­றோர், தங்­கள் வீட்டு மாண­வச் செல்­வங்­கள் மனந்­த­ள­ரா­தி­ருக்­கும் பயிற்­சி­யைத் தாங்­களே அளித்து, அவர்­கள் மன­தில் நம்­பிக்­கையை வளர்த்­தி­டக் கோரு­கி­றேன்.

"உயிர் காக்­கும் மருத்­து­வப் படிப்­புக்­காக, உயிரை மாய்த்­துக் கொள்­ளும் அவ­லத்­தைத் தடுத்திடு­வோம். சட்­டப் போராட்­டத்­தின் மூலம் 'நீட்' தேர்வை விரட்­டு­வோம்," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

அண்­மை­யில் 'நீட்' தேர்வு எழு­திய தமி­ழக மாணவி ஒரு­வர் தேர்­வில் தேர்ச்சி பெற முடி­யா­மல் போய்­வி­டுமோ என்ற அச்­சத்­தில் தன் உயிரை மாய்த்­துக்கொண்­டார். இதை­ய­டுத்து தமி­ழக முதல்­வர் மேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்­துள்­ளார்.

இதற்­கி­டையே, மாண­வர்­கள் இவ்­வா­றான முடிவை எடுத்­த­தற்கு திமு­க­தான் பொறுப்­பேற்க வேண்­டும் என பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை கூறி­ய­தாக மாலை­ம­லர் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

நீட் தேர்வை முன்­வைத்து திமுக அரசு, அர­சி­யல் ஆதா­யம் தேட முயற்சி செய்­கிறது என்று அண்ணாமலை மேலும் சாடி உள்ளார்.