கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை: நைஜீரியர்கள் ஆறு பேர் கைது

1 mins read
6e821e2c-2370-41f1-bc4e-8b2cd1aa172a
-

புதுவை: கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு கஞ்சா விற்ற நைஜீ­ரி­யர்­கள் ஆறு பேரை புதுவை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

இதை­ய­டுத்து நடந்த விசா­ர­ணை­யில் அவர்­கள் ஆறு பேரும் விசா காலம் முடி­வ­டைந்த பிற­கும் சட்­ட­விரோ­த­மாக நாட்­டில் தங்­கி­ இருப்­ப­து அம்­ப­ல­மா­னது.

புதுவை, வாழைக்­கு­ளம் பகு­தி­யில் சிலர் கஞ்சா விற்­பது தொடர்­பாக கிடைத்த ரக­சிய தக­வ­லை­ அடுத்து போலி­சார் அங்கு விரைந்து சென்று அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது அங்­குள்ள ஒரு வீட்­டில் சோத­னை­யிட்­ட­போது மூன்று கிலோ கஞ்சா இருப்­பது தெரி­ய­வந்­தது. அவ்­வீட்­டில் தங்­கி­யி­ருந்த நைஜீ­ரி­யா­வைச் சேர்ந்த மூன்று ஆட­வர்­கள், மூன்று பெண்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அப்­போது ஆறு பேரும் கடந்த 2009ஆம் ஆண்டு இந்­தியா வந்­த­தும் அனு­ம­திக்­கப்­பட்ட காலத்­துக்­கும் அதி­க­மாக சட்டவிரோ­த­மாக புது­வை­யில் தங்கி இருப்­ப­தும் தெரி­ய­வந்­தது.

புது­வை­யைச் சேர்ந்த ஒரு­வ­ரது உத­வி­யோடு உள்­ளூர் கல்­லூ­ரி­களில் படிக்­கும் மாண­வர்­க­ளைக் குறி வைத்து இவர்­கள் போதைப்­பொ­ருள்­கள் விற்று வந்­துள்­ள­னர். இதை­ய­டுத்து இவர்­க­ளுக்கு உத­விய புதுவை ஆட­வர் ஒரு­வ­ரும் கைதா­னார்.

இவர்­க­ளுக்கு போதைப் பொருள்­களை விநி­யோ­கித்­தது யார், எங்­கி­ருந்து அவை புது­வைக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றன என்­பது குறித்து தொடர்ந்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.