பிரச்சினைகளை தீர்க்க இறையன்பு அறிவுறுத்து

பிரச்சினைகளை தீர்க்க இறையன்பு அறிவுறுத்து

1 mins read
3f775d50-7aa9-48c2-a7b3-49d02ecbe353
இறையன்பு. படம்: ஊடகம் -

சென்னை: வட்டார அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இழுத்தடிக்கப்படுவதால் மக்கள் பொறுமை இழந்து தலைமைச் செயலகத்தை நோக்கி புறப்பட்டுவிடுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே விரைவாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"முதல்வரின் தனிப் பிரிவுக்கு வரும் மனுக் களை போர்க்கால அடிப் படையில் அலுவலர்கள் அணுகுவதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது. அதேபோன்று அனைத்து நேர்வுகளில் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. எனினும், கனிவோடும் பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய தேவை எழாது," என்று இறையன்பு தெரிவித்துள்ளார்.