ராமதாஸ்: நாட்டில் மொழி சமநிலை வேண்டும்

ராமதாஸ்: நாட்டில் மொழி சமநிலை வேண்டும்

1 mins read
62b70208-4c80-4c88-b28d-38bbfba2f861
-

சென்னை: இந்தி மொழி­யைப் பயன்­ப­டுத்­தி­னால்தான் நாடு முன்­னே­றும் எனக் கூறு­வ­தில் ஏரா­ள­மான பொருள்­கள் மறைந்து கிடப்­பதாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.

இவ்­வாறு பேசு­வது தவறு என்­றும் இனி இப்­ப­டிப் பேசக்­கூ­டாது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மத்­திய உள்­துறை அமைச்­சர் நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது, இந்­தி­யர்­கள் அனை­வ­ரும் நாட்­டின் அலு­வல் மொழி­யான இந்­தி­யு­டன் தங்­க­ளது தாய்­மொ­ழி­யை­யும் இணைத்­துப் பயன்­ப­டுத்­து­வ­தில்தான் நாட்­டின் முன்­னேற்­றம் அடங்கி உள்­ளது என்­றார்.

இதை ஏற்க இய­லாது என மருத்­து­வர் ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.

"தமிழ் உள்­பட, நாட்­டில் பயன்­படுத்­தப்­படும் 22 மொழி­க­ளை அலு­வல் மொழி­யாக்க வேண்­டும் என்ற கோரிக்கை நீண்ட கால­மாக கிடப்­பில் உள்ளது. அதை உடனே நிறை­வேற்றி, மொழி சம­நி­லையை மத்­திய அரசு ஏற்­ப­டுத்த வேண்­டும்," என ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.