ைநஜீரியர்கள் வாக்குமூலம்: 32 பெண்களிடம் பணம் பறித்தோம்

ைநஜீரியர்கள் வாக்குமூலம்: 32 பெண்களிடம் பணம் பறித்தோம்

1 mins read
eee63700-787f-4d33-96be-848cf18745c8
-

சென்னை: 'மேட்ரிமோனியல்' திருமணத் தளம் மூலம் விவாகரத்தாகி, மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களைக் குறிவைத்து பணம் பறித்ததாக கைதான இரு நைஜீரியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சிலிடஸ் கேஸ்சுக்வு, 23, பாலினஸ் சிகேலுவோ, 31, ஆகிய இரு நைஜீரியர்களையும் மூன்று நாள் காவலில் எடுத்து போலிசார் விசாரித்தனர். அப்போது, "தமிழகத்தில் 32 பெண்களை ஏமாற்றி ₹1.50 கோடி பணம் மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடியில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட ஏழு பேர் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்," என போலிசார் கூறியுள்ளனர்.