கோைவயில் பாதிப்பு அதிகரிப்பு; கட்டுப்பாடுகள், தளர்வுகள் அமல்

கோைவயில் பாதிப்பு அதிகரிப்பு; கட்டுப்பாடுகள், தளர்வுகள் அமல்

2 mins read
e97ab752-b6bc-4b74-b6fb-2b3560432006
-

கோவை: கோவை­யில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சற்றே தலை­தூக்கி வரும் நிலை­யில், இதை ஒரு கட்­டுக்­குள் கொண்­டு­வர இன்று 17ஆம் தேதி முதல் கூடு­தல் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் சில தளர்­வு­க­ளை­வும் அறி­வித்து மாவட்ட ஆட்­சி­யர் சமீ­ரன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கொரோனா மூன்­றாம் அலை­யால் மக்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க, தடுப்­பூசி போடும் பணி மாநி­லம்­தோ­றும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், இந்­தக் கிரு­மிப் பர­வல் கோவை, சென்னையில் சற்று அதி­க­ரித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஆட்­சி­யர் சமீ­ரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "இனி ஞாயிறுதோறும் கோைவயில் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­ப­டாது. அத்­தி­யா­வ­சியப் பொருள்களான பால், மருந்­துகள், காய்­கறி, மளி­கைப் பொருள்களை விற்பனை செய்யும் கடை­க­ளைத் தவிர மற்ற கடை­கள், சந்­தை­கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் செயல்படத் தடை விதிக்­கப்­ப­டு­கிறது.

"அனைத்து உண­வ­கங்­கள், ரொட்­டிக் கடை­களில் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 'பார்­சல்' சேவை மட்­டும் அனு­ம­திக்­கப்­படும்.

"அனைத்து வணிக வளா­கங்­கள், திரை­ய­ரங்­கு­கள், பூங்­காக்­கள், சுற்­று­லாத் தலங்­கள் ஞாயிற்­றுக்­கிழமைகளில் செயல்படாது," என்று அறி­வித்­துள்­ளார்.

கூடு­தல் தளர்­வு­க­ளாக உழ­வர் சந்­தை­களில் 50% கடை­க­ளுக்கு அனு­ம­தி­யும் உள்­ளூர் வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கொண்டு பொள்­ளாச்சி மாட்டுச் சந்தை இயங்­க­வும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கட்­டுப்­பா­டு­க­ளுக்கு பொது மக்­கள் ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும் என்­றும் ஆட்சியர் சமீரன் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

தமி­ழக பாதிப்பு நில­வ­ரம்

தமி­ழ­கத்­தில் கடந்த மூன்று நாள்­க­ளாக குறைந்து வந்த கிருமி பாதிப்பு கடந்த 24 மணி நேரத்­தில் சற்று அதி­க­ரித்துக் காணப்பட்டது.

தமி­ழக சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், தமி­ழ­கத்­தில் புதி­தாக மேலும் 1,658 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இதன்­மூ­லம் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 26 லட்­சத்து 38 ஆயி­ரத்து 668 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

தலை­ந­கர் சென்­னை­யில் கடந்த 24 மணி நேரத்­தில் 226 பேரும் கோவை மாவட்­டத்­தில் 224 பேரும் கிரு­மித்­தொற்றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது. மாநிலத்தில் கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வந்த 29 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இவர்­க­ளை­யும் சேர்த்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 35,246 ஆக அதி­க­ரித்­துள்­ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.