ஜெயக்குமார்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைத் தடுக்கவே சோதனை நடவடிக்கை வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் சோதனை

ஜெயக்குமார்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைத் தடுக்கவே சோதனை நடவடிக்கை வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் சோதனை

2 mins read
c6553987-fecb-4e82-8e77-47ea74d39f54
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஹில்ஸ் தங்குவிடுதியில் பத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக இவ்விடுதி முன்பு 20 போலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் கே.சி.வீர­ம­ணிக்­குச் சொந்­த­மான 28 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை அதி­கா­ரி­கள் நேற்று திடீர் சோதனை நடத்­தி­னர்.

இவர் அமைச்­ச­ராக இருந்த தரு­ணத்­தில், வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக ரூ.90 கோடி அள­வுக்கு சொத்து குவித்­த­தா­கப் புகார்கள் கூறப்­பட்­டன.

இந்­நி­லை­யில், இதை உறுதிப்படுத்­திக்­கொள்ள கே.சி. வீர மணிக்­குச் சொந்­த­மான இடங்­களில் எல்லாம் சோதனை நடந்­தது. சோதனை நடக்­கும் இடங்­க­ளுக்கு வெளியே அதி­முக தொண்­டர்­களின் ஆர்ப்­பாட்­டத்தையும் காணமுடிந்தது.

தமிழகத்தில் மட்­டு­மின்றி கர்­நா­டகாவின் பெங்­க­ளூரு மாவட்­டத்­தி­லும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்­தது.

இதன்மூலம், கடந்த 5 ஆண்­டு­களில் மட்­டும் வரு­மா­னத்­திற்­கும் அதி­க­மாக 654% அள­வுக்கு கே.சி.வீர­ம­ணி சொத்து சேர்த்­தி­ருப்­ப­தா­க­வும் இது­கு­றித்து லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­தா­க­வும் 'சம­யம்' ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

கடந்த ஒரு­சில மாத­மா­கவே ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான அதி­முக முன்­னாள் அமைச்­சர்­க­ளின் வீடு, அலு­வ­ல­கங்­களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

கரூ­ரில் முன்­னாள் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்த எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர், கோவை­யில் முன்­னாள் உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ராக இருந்த எஸ்.பி. வேலு­மணி உள்­ளிட்­டோர் வீடு­களில் நடத்­தப்­பட்ட சோதனைகளில் முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

இந்­நி­லை­யில், நேற்று காலை 7 மணி முதல் வணி­க­வரி, பத்­தி­ரப்­ப­தி­வுத் துறை­யின் முன்­னாள் அமைச்­சர் கே.சி.வீர­மணிக்­குச் சொந்­த­மான இடங்­களில் அதி­காரி­கள் சோதனை நடத்­தி­னர்.

தமிழ்­நாட்­டில் சென்னை, வேலூர், திரு­வண்­ணா­மலை, திருப்­பத்­தூர் உள்­ளிட்ட 28 இடங்­களில் உள்ள கே.சி.வீர­ம­ணி­யின் வீடு, திரு­மண மண்­ட­பம், நட்­சத்­திர தங்கு­வி­டு­தி­யிலும் அவ­ரது உற­வி­னர் வீடு­க­ளி­லும் சோதனை நடந்­தது.

வெற்­றி­யைத் தடுக்­கவே சோதனை

"உள்­ளாட்­சித் தேர்­தல் நடக்­க­வுள்ள ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் அதி­மு­க­வி­னரை பணி செய்­ய­விடா­மல் தடுக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கிறது," என முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­குமார் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

"அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யா­கவே முன்­னாள் அமைச்­சர் கே.சி.வீர­மணி வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்டு வரு­கிறது. அதி­மு­க­வி­ன­ரின் வெற்றி வியூ­கத்­தைத் தடுக்க காய் நகர்த்­தப்­பட்­டுள்­ளது,'' என அவர் கூறி­யுள்­ளார்.