உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்து

உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்து

1 mins read
90f9f1d5-dd9e-45db-92ab-16f020b1802d
-

சென்னை: ஊரக உள்­ளாட்­சித் தேர்­தலை ஒரே கட்­ட­மாக நடத்­தும்­படி அதி­முக, பாமக ஆகிய இரு கட்­சி­களும் மாநி­லத் தேர்­தல் ஆணை­யத்தை வலி­யு­றுத்தி உள்­ளன.

தமி­ழ­கத்­தில் ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கான உள்­ளாட்­சித் தேர்­தல் அடுத்த அக்­டோ­பர் 6, 9ஆம் தேதிகளில் இரு கட்­டங்­க­ளாக நடத்­தப்­படும் என மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்தத் தேர்­தலை ஒரே கட்­ட­மாக நடத்தவேண்­டும் என மாநிலத் தேர்­தல் ஆணை­யத்­துக்கு முன்னாள் முதல்வர் பழ­னி­சாமி கடிதம் எழுதியுள்ளார்.

"2019ல் அதிக மாவட்­டங்­களில் உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற்­ற­தால் இரு கட்­டங்­க­ளாக நடத்­தப்­பட்­டது. தற்­போது 9 மாவட்­டங்­களில் மட்­டுமே தேர்­தல் நடை­பெற உள்­ள­தால் அவ்­வாறு நடத்தவேண்­டிய அவ­சி­யம் இல்லை," என்று கூறி­யுள்­ளார்.

பாமக தலை­வர் ஜி.கே.மணி அளித்­துள்ள கடி­தத்­தில், "இந்தத் தேர்தலைவிட 10 மடங்கு அதிக வாக்­கா­ளர்­க­ளைக் கொண்ட சட்­டப்­பே­ரவை, மக்­க­ள­வைத் தேர்­தல்­கள் ஒரே கட்ட­மா­கத்­தான் நடத்­தப்­பட்­டுள்­ளன. இருமுறை நடத்­தி­னால் முறை­கே­டு­கள் நடை­பெ­ற வாய்ப்­புள்­ளது," என்று கூறியுள்ளார்.