அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஏடிஎம் இயந்திரத்துடன் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற திருடர்களைப் பிடிக்கும் பணியில் ஆறு தனிப்படை போலிசார் ஈடுபட உள்ளனர்.
போலிசாரின் முதல்கட்ட விசாரணையில் ரூ.4 லட்சம் பணம் கொள்ளை போனது அம்பலமானது. ராணிப்பேட்டை மாவட்டம், பெருங்களத்தூரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் நேற்று முன்தினம்தான் வங்கி அலுவலர்கள் ரூ.8.5 லட்சம் பணத்தை நிரப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர்கள் அங்குள்ள இயந்திரம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
"ஏடிஎம் இயந்திரத்தின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு, பேட்டரியில் இயங்கும் ரம்பம், 'வெல்டிங் ெமஷின்' கருவியைப் பயன்படுத்தி இயந்திரத்தின் உள்ளே உள்ள பணப்பெட்டியைக் கொள்ளையர்கள் களவாடிச் சென்றது ெதரியவந்தது.
"ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளிகள் யாருமில்லை. இரவு நேரத்தில் யாரும் அதிகம் வரமாட்டார்கள் என்பதால் இந்த திருட்டு நடந்துள்ளது. கொள்ளையர்கள் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளனர். பாதுகாப்பாக இருந்த ஒரு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வரு கிறோம்," என்று அரக்கோணம் போலிசார் கூறியுள்ளனர்.

