‘ஜெயலலிதா மரணம்: விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல்’

புது­டெல்லி: மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் தொடர்­பான விசா­ர­ணையை மேற்­கொண்டு வரும் ஆறு­மு­க­சாமி ஆணையம், தங்களது ஆணை யத்தின் மீதான இடைக்­கா­லத் தடையை நீக்­கி­னால் விசா­ரணை அறிக்கை ஒரு மாதத்­தில் தாக்­கல் செய்­யப்­படும் என உச்ச நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் தொடர்­பில் இது­வரை 115 சாட்­சி­களை விசா­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் இன்­னும் நான்கு சாட்­சி­களை மட்­டுமே ஆணை­யம் விசா­ரிக்க வேண்­டிய தேவை உள்ளதாகவும் ஆணை யம் மேலும் கூறி­யுள்­ளது.

விசா­ர­ணை­யில் இருந்து தடை கோரிய அப்­போ­லோ­வின் வழக்­கும் அடுத்த வாரம் விசா­ரிக்­கப்­படும் என்று உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

ஜெய­ல­லிதா மர­ணம் தொடர்­பான விசா­ர­ணையை நடத்த ஓய்வு பெற்ற நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யில் விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­பட்­ட நிலையில், இந்த ஆணை­யத்­தின் விசா­ர­ணைக்கு தடை விதிக்கக் கோரி அப்­போலோ மருத்­து­வ­மனை நிர்­வா­கத்தின் தரப்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மனு­வில், "எங்­க­ளுக்கு இந்த வழக்­கில் இருந்து விலக்கு வேண்­டும். ஏனெ­னில், நாங்­களும் மருத்­து­வர்­கள்­தான். எங்­க­ளி­டம் ஆறு­மு­க­சாமி ஆணை­யம் விசா­ரிப்­ப­தற்கு எது­வும் இல்லை. மருத்­துவ வல்­லு­நர்­கள் யாரா­வது விளக்­கம் கேட்­டால் சொல்­ல­முடி­யும். எனவே, எங்­க­ளுக்கு விலக்கு அளிக்­க­வேண்­டும்," என்று கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஆறு­மு­க­சாமி ஆணைய விசா­ர­ணைக்கு இடைக்­கா­லத் தடை விதித்து உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அந்த இடைக்­கால தடையை நீக்­கக்கோரி தமி­ழக அரசு சார்­பில் இடை­யீட்டு மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த இரு மனுக்­கள் மீதான விசா­ரணை உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி அப்­துல் நசீர் தலை­மை­யிலான அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­த நிலையில், வழக்கு விசா­ரணை அடுத்த வாரம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!