முன்னாள் அமைச்சரின் வீட்டில் 5 கிலோ தங்கம், வைரம் பறிமுதல்

முன்னாள் அமைச்சரின் வீட்டில் 5 கிலோ தங்கம், வைரம் பறிமுதல்

2 mins read
e752a1bb-0f2f-411d-999b-bd0db061a5ad
''சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்காமல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதுபோன்ற எத்தனையோ அச்சுறுத்தல்களை நாங்கள் பார்த்து விட்டோம். எதற்கும் அஞ்சமாட்டோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சோதனை நடந்துள்ளது. வழக்குகளைச் சந்திக்கத் தயார்,'' என செய்தியாளர்களிடம் கே.சி.வீரமணி கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

திருப்­பத்­தூர்: முன்­னாள் அமைச்­சர் கே.சி.வீர­ம­ணிக்­குச் சொந்­த­மான 35 இடங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் கிலோ கணக்­கில் தங்க நகை­கள், அமெ­ரிக்க டாலர், ஒன்­பது சொகுசு கார்­கள், பல லட்­சம் மதிப்­புள்ள மணல் உள்­ளிட்­டவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

வியா­ழன் காலை முதல் நள்ளி ரவு 12 மணி வரை இந்­தச் சோதனை நீடித்­துள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் ஜோலார்­பேட்டை தொகுதி எம்­எல்ஏ வாக இருந்­த­ கே.சி.வீர­மணி மீது, வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­துள்­ள­தாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி­சார் வழக்­குப் பதிந்துள்­ள­னர்.

தாங்­கள் மேற்­கொண்ட அதி­ரடிச் சோதனை குறித்த அதி­கா­ர­பூர்வ தக­வல்­க­ளை­யும் அவர்கள் வெளி­யிட்­டுள்­ள­னர்.

"பெங்­க­ளூ­ரு­வில் இரண்டு இடங்­கள், சென்­னை­யில் ஆறு இடங்­கள் என மொத்­தம் 35 இடங்­களில் அதி­ரடிச் சோத­னை­களை நடத்­தி­னோம்.

"ஏறக்­கு­றைய 5 கிலோ தங்க நகை­கள் (623 சவ­ரன்), 47 கிராம் வைர நகை­கள், 7.2 கிலோ வெள்­ளிப் பொருள்­கள், ரூ.34 லட்­சம் பணம், ரூ.1.80 லட்­சம் மதிப்­பி­லான அமெ­ரிக்க டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்­பட ஒன்­பது சொகுசு கார்­கள், 5 கணினி வன்­பொ­ருள்­கள், சொத்­து­கள் சம்­பந்­தப்­பட்ட முக்­கிய ஆவணங்­கள், வங்­கிக் கணக்கு புத்­த­கங்­கள் உள்­ளிட்­ட­வற்றை கைப்­பற்றி உள்­ளோம்.

"கே.சி.வீர­ம­ணி­யின் வீட்டு வளா­கத்­தில் குவித்து வைக்­கப்­பட்­டி­ருந்த மண­லின் மதிப்பு மட்­டும் ரூ.30 லட்­சம் இருக்­கும் என தெரி­ய­வந்­துள்­ளது. விசா­ரணை தொடர்­கிறது," என லஞ்ச ஒழிப்­புத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அதி­முக கண்­ட­னம்

இந்த சோதனை தொடர்­பாக அதி­மு­க­வின் தலை­வர்­கள் இபி­எஸ், ஓபி­எஸ் ஆகி­யோர் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். "திமுக அரசு வேண்­டு­மென்றே அதி­மு­க­வி­னரை பழி­வாங்க நினைக்­கிறது. உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், அதில் வெற்றி பெறு­வ­தற்­காக சோதனை என்­னும் நாட­க­மா­டு­கின்­ற­னர்,'' என்று தெரி­வித்­துள்­ள­னர்.

திருப்­பத்­தூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கே.சி.வீர­மணி கூறு­கை­யில், 'திமுக அரசு காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டன் முன்­னாள் அமைச்­சர்­கள்­மீது வேண்­டு­மென்றே சோதனை என்ற பெய­ரில் தாக்­கு­தல் நடத்தி வரு­கிறது.

"திமுக அரசு போடும் எந்­த­வி­த­மான வழக்­கு­க­ளை­யும் சட்­டப்­படி சந்­திக்கத் தயா­ராக இருக்­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.