அரசு: நிரந்தர ஊழியர்கள் போலவே தற்காலிக ஊழியர்களுக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு

அரசு: நிரந்தர ஊழியர்கள் போலவே தற்காலிக ஊழியர்களுக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு

1 mins read
2aa98b8d-d07b-48ec-8dfb-019c354582be
-

சென்னை: நிரந்­தர ஊழி­யர்­கள், தற்­கா­லிக ஊழி­யர்­கள் என எந்­தப் பாகு­பா­டும் பார்ப்­ப­தில்லை என ஒரு வழக்கின் தொடர்பில், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தமிழக அரசின் சார்பில் முன்னி லையான வழக்கறிஞர் விளக்­கம் கூறியுள்ளார்.

நிரந்­தர ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கு­வது போன்றே பணி­யில் சேர்ந்து ஓராண்டு முடிந்­தி­ருந்­தால் தற்­கா­லிக அரசு ஊழி­யர்­க­ளுக்­கும் 365 நாள்­கள் (ஓராண்டு காலம்) மகப்­பேறு விடுப்பு வழங்­கப்­ப­டு­கிறது என்று அவர் மேலும் கூறினார்.

அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் சம்­ப­ளத்­து­டன் கூடிய மகப்­பேறு விடுப்பை 180 நாட்­களில் இருந்து 270 நாட்­க­ளாக அதிகரித்து கடந்த 2016ல் அரசு ஆணை பிறப்­பித்­தது.

இச்சலு­கை தற்­கா­லி­கப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் 2020ல் நீட்டித்து உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இந்நிலையில், "இந்த அரசாணை­ முறை­யாக அமல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பல மாவட்­டங்­களில் அரசு மருத்­து­வ­ம­னை­களில் பணி­பு­ரி­யும் தற்­கா­லி­கப் பெண் பணி­யா­ளர்­க­ளுக்கு மகப்­பேறு விடுப்பு வழங்­கு­வது இல்லை. அவர்களுக்கும் மகப்­பேறு விடுப்பை ஊதி­யத்­து­டன் வழங்க உத்­த­ர­விட வேண்­டும்," என்று ராஜ­குரு என்­ப­வர் தொடர்ந்­த வழக்கை முடித்துவைத்து நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.