தலைக்கவசம் அணிவோர் எண்ணிக்கை 86%ஆக உயர்வு

தலைக்கவசம் அணிவோர் எண்ணிக்கை 86%ஆக உயர்வு

1 mins read
398f7376-d463-4258-83a8-ab9d7fc9d0a7
-

சென்னை: சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 விழுக்காட்டில் இருந்து 86 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை போக்குவரத்து போலிசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வரை 659 பேர் விபத்தில் இறந்து போயுள்ளனர். 3,325 பேர் விபத்தில் காயம் அடைந்து உள்ளனர். இறந்தவர்களில் 26 விழுக்காட்டினர் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள். அதுபோல காயம் அடைந்த வர்களில் 37 விழுக்காட்டினர் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள். உயிரிழந்த வர்களில் 74% பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.