48 மணிநேரத்தில் 5,000 மரக்கன்றுகள் நட்டு சாதித்த இளையர்கள்

விரு­து­ந­கர்: விரு­து­ந­க­ரைச் சேர்ந்த சகோ­த­ரர்­க­ளான அருண் (25 வயது), ஸ்ரீகாந்த் (22 வயது) இரு­வ­ரும் 48 மணி நேரத்­தில் ஐந்­தா­யி­ரம் மரக்­கன்­று­களை நட்டு சாதித்­துள்­ள­னர்.

இவர்­க­ளின் இச்­சா­தனை அனைத்­து­லக சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

அருண் தனி­யார் நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வரும் நிலை­யில், ஸ்ரீகாந்த் பொறி­யி­யல் படிப்பை முடித்­துள்­ளார்.

கடந்த ஜன­வரி மாதம் தொடங்கி இன்­று­வரை நாள்­தோறும் சில மணி­நே­ரத்தை மரக்­கன்­று­கள் நடும் பணிக்­காக இரு­வ­ரும் செல­வி­டு­கின்­ற­னர்.

"தொடக்­கத்­தில், வீட்­டின் பின்­புறத்­தில் இரண்டு செடி­களை நட்டு அதனை பரா­ம­ரித்­தோம். பின்­னர் அந்த ஆர்­வம் தோட்­ட­மாக உரு­வெ­டுத்­தது.

"இதை­ய­டுத்து இயற்கை பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்த முடிவு செய்­தோம்," என்று குறிப்­பிடும் ஸ்ரீகாந்த், இது­வரை விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் மட்­டும் ஐந்­தா­யி­ரம் மரக்­கன்­று­களை நட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

மரக்­கன்­று­களை நடு­வ­தற்­கான இடங்­களை முன்­கூட்­டியே தேர்வு செய்த சகோ­த­ரர்­கள், தின­மும் மிதி­வண்­டி­யி­லேயே பல்­வேறு பகு­தி­க­ளுக்­குச் சென்று வந்­துள்­ள­னர்.

"இவ்­வாறு திட்­ட­மிட்டு ஆறு நாள்­களில் ஐம்­ப­தா­யி­ரம் மரக்­கன்­று­களை நட்­டோம். இதற்­காக தின­மும் எட்டு மணி­நே­ரம் செல­விட்­டோம். இவ்­வாறு 48 மணி­நே­ரத்­தில் இலக்கை சாதிக்க முடிந்­தது. அரசாங்கத்துடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்," என்­கி­றார் ஸ்ரீகாந்த்.

சாதனைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்ள சகோ­த­ரர்­கள் இரு­வ­ரை­யும் விரு­து­ந­கர் மாவட்ட ஆட்­சி­யர் பாராட்டி உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!