ஏலம் விடப்பட்ட பதவி: ஆட்சியர் விசாரணை

ஏலம் விடப்பட்ட பதவி: ஆட்சியர் விசாரணை

1 mins read
fed0d7b3-a05d-4008-9eff-fa4306822d29
விசாரணை நடத்தும் மாவட்ட ஆட்சியர். படம்: ஊடகம் -

விழுப்­பு­ரம்: செஞ்சி அருகே ஊராட்சித் தலை­வர் பதவி 13 லட்­சம் ரூபாய்க்கு ஏலம் விடப்­பட்­ட­தாக வெளி­யான தக­வலை அடுத்து விழுப்­பு­ரம் மாவட்ட ஆட்­சி­யர் அங்கு நேரில் சென்று விசா­ரணை மேற்­கொண்­டார்.

செஞ்சி ஒன்­றி­யத்­தில் உள்ள பொன்­னங்­குப்­பம் ஊராட்சி மன்­றத் தலை­வர் பதவியை மங்கை என்­ப­வர் ரூ.13 லட்­சத்­துக்கு ஏலம் எடுத்­துள்­ள­தாக துத்­திப்­பட்டு கிராம மக்­கள் புகார் எழுப்­பி­யுள்­ள­னர். இதையடுத்து ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.