சுழற்சி முறையில் பரிசோதனை

சுழற்சி முறையில் பரிசோதனை

1 mins read
5a86d456-6340-4018-963e-483e4dff89fd
-

கோவை: கோவை­யில் உள்ள பள்­ளி­களில் மாணவ, மாண­வி­யர்க்கு சுழற்சி முறை­யில் கொரோனா தொற்­றுப் பரி­சோ­தனை நடத்­தப்­படு­கிறது.

அங்கு அனைத்து கல்வி மையங்­க­ளை­யும் கண்­கா­ணிக்க சுகா­தார ஆய்­வா­ளர் தலை­மை­யில் ஆங்­காங்கே குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­கு­ழு­வில் உள்­ள­வர்­கள் கல்வி நிலை­யங்­க­ளுக்கு நேரில் சென்று மாண­வர்­க­ளுக்கு பரி­சோ­தனை மேற்­கொள்­கி­றார்­கள். தின­மும் சுமார் 700 மாண­வர்­களுக்கு பரி­சோ­தனை நடத்­தப்­படும் நிலை­யில், கோவை மாந­க­ராட்­சிப் பகு­தி­களில் மட்­டும் தின­மும் ஆறா­யி­ரம் பேருக்கு பரி­சோ­தனை நடக்­கிறது.

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,669 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட 200 வார்­டு­க­ளி­லும் மொத்­தம் 1,600 மையங்­களில் இன்று கொரோனா தடுப்­பூசி சிறப்பு முகாம் நடத்­தப்­ப­டு­கிறது.