பிரம்மாண்ட நூலகம்: முதல்வர் ஆலோசனை

பிரம்மாண்ட நூலகம்: முதல்வர் ஆலோசனை

1 mins read
06e3098a-dc80-4977-a4fd-74cf1f037071
-

சென்னை: காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் நினை­வாக அமைய உள்ள பிரம்­மாண்ட நூல­கத்­தின் கட்­டட வடி­வ­மைப்பை இறுதி செய்­வது தொடர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டம் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

அப்­போது கரு­ணா­நி­தி­யின் பெயரை நினை­வு­கூ­ரும் வகை­யில் நூல­கத்­தின் வடி­வ­மைப்பு அமைய வேண்­டும் என்­றும் அதற்­கேற்ப வடி­வ­மைப்­பில் உரிய மாற்­றங்­கள் செய்­யப்­பட வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

இந்த பிரம்­மாண்ட நூல­கத்­தின் கட்­டு­மா­னப் பணிக்கு 70 கோடி ரூபாய் செல­வா­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனி­னும், கூடு­தல் நிதி ஒதுக்க அரசு தயா­ராக உள்­ளதாகக் கூறப்படுகிறது.