தியாகராஜன்: சிறிய அதிகாரங்களை இழக்க தமிழகம் விரும்பவில்லை

தியாகராஜன்: சிறிய அதிகாரங்களை இழக்க தமிழகம் விரும்பவில்லை

1 mins read
2efd2d40-17be-4c8c-8e9e-4b0a9fbfe1a1
தியாகராஜன். படம்: ஊடகம் -

சென்னை: மாநில அர­சுக்கு உள்ள சிறிய அதி­கா­ரங்­களை இழக்க தமி­ழ­கம் விரும்­ப­வில்லை என நிதி­யமைச்­சர் தியா­க­ரா­ஜன் கூறி­யுள்­ளார்.

இது தொடர்­பாக மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்றில், ஜிஎஸ்டி அம­லாக்­கத்­துக்­குப் பின்னர் மாநிலங்­க­ளுக்கு உள்ள சிறிய அள­வி­லான வரி உரி­மை­கள் கூட பறி­போய்­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஜிஎஸ்டி செயல்­பா­டும் அதற்­கான தொழில்­நுட்­ப­மும் கடி­ன­மா­ன­தாக உள்­ளது என்­றும் வரி விவ­ரங்­களை தமி­ழில் அளிக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் தியா­க­ரா­ஜன் தமது கடி­தத்­தில் கூறி­யுள்­ளார்.

"ஜிஎஸ்டி நடை­முறை ஆங்­கி­லத்­தில் இருப்­ப­தால் சிறு, குறு வணி­கர்­கள் அதைப் புரிந்துகொள்ள முடி­ய­வில்லை. எனவே வரி ஆலோ­ச­கர்­களை நாடு­வ­தால் அவர்­க­ளுக்கு கூடு­தல் செல­வா­கிறது. எனவே ஜிஎஸ்டி நடை­மு­றையை இணை­யத்­தில் முழு­மை­யா­கத் தமிழ்ப்­படுத்த வேண்­டும்," என்று அமைச்­சர் தியா­க­ரா­ஜன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மாநி­லங்­க­ளின் சொந்த வரு­வாயை நிர்­வ­கிப்­ப­தில் பெட்­ரோல், டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்­டுமே இப்­போது மாநில அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள அவர், இதை­யும் ஜிஎஸ்டி வரம்­புக்­குள் கொண்டு வந்­தால் மாநி­லங்­க­ளுக்குச் சொந்த வரி வரு­வாய் என்­பதே இல்­லா­மல் போய்­வி­டும் என்று கவலை தெரி­வித்­துள்­ளார்.