2வது மாபெரும் தடுப்பூசி முகாம்

2வது மாபெரும் தடுப்பூசி முகாம்

2 mins read
0b835531-1f68-4bec-80d9-c27a8878eb4e
-

சென்னை: தமி­ழ­கத்­தில் நேற்று 2வது முறையாக மாபெ­ரும் தடுப்­பூசி முகாம் நடத்தப்பட்­டது.

இதில் இரண்டு லட்­சம் பேருக்கு மேல் தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப் ­ப­டுத்­தும் வகை­யில் தமி­ழ­கத்­தில் 18 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி செலுத்­து­வது தீவி­ர­மாக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற 'மெகா' தடுப்­பூசி முகா­மின்­போது 28 லட்­சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டது.

இதன் தொடர்ச்­சி­யாக நேற்று 2வது 'மெகா' தடுப்­பூசி முகா­மில் 30 லட்­சம் பேர் என்ற இலக்கை எட்ட அரசு முடிவு செய்தது.

அதா­வது நேற்று ஒரு நாள் மட்­டும் இரண்டு லட்­சம் பேருக்கு மேல் தடுப்­பூசி போட்டு 30 லட்­சத்தை எட்டுவது அரசாங்கத்தின் முடிவாகும். கடந்­த­முறை தடுப்­பூசி மருந்­து­கள் தீர்ந்­து­விட்ட மையங்­களில் தற்­போது கூடு­த­லாக மருந்­து­கள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக மருத்­து­வத்­துறை கூறி­யுள்­ளது. நேற்றுக் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடை­பெற்­றது.

சென்னை மாந­க­ராட்­சி­யில் மட்­டும் 1,600 இடங்­களில் சிறப்பு முகாம்­கள் நடத்­தப்­பட்டன. முகாம் நடை­ பெறும் இடங்­களை மாந­க­ராட்­சி­யின் இணை­யத்­த­ளம் மற்­றும் மாந­க­ராட்­சி­யின் தொலை­பேசி எண்­களைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்­ள­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வந்தார்.

பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்த அவர், தடுப்பூசி போடுவதற்காக வரிசை யில் காத்திருந்தவர்களிடம் அங்கு உள்ள வசதிகள் பற்றி கேட்டறிந் தார்.

சென்­னை­யில் கடந்த முறை மூன்­றரை லட்­சம் பேருக்குத் தடுப்­பூசி செலுத்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் ஒரு லட்­சத்து 90 ஆயி­ரம் பேருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டது.

கடந்த முறை தடுப்­பூசி செலுத்து­வோரை ஊக்­கு­விக்­கும் வகை­யில் பல இடங்­களில் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

அதே­போல, இம்­முறை திரு­வள்­ளூர் நக­ராட்சிப் பகு­தி­யில் தடுப்­பூசி போட்டுக் கொள் வோருக்கு குலுக்­கல் முறை­யில் தேர்ந்தெடுக்கப்பட்டு 'ஆன்ட்­ராய்ட்' கைபே­சி­கள் வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.