தடுப்பூசி போட்ட அனைவருக்கும் பரிசு என அறிவிப்பு

சென்னை: சென்னை திரு­வேற்­காட்­டில் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டால் 'மிக்ஸி', 'கிரைண்­டர்' வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்ளதால் மக்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

தமி­ழ­கத்­தில் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் சிலர் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள தயங்­கு­கின்­ற­னர். உடல் நலப் பாதிப்பு ஏற்­பட்­டு ­விடு மோ என்ற அச்­சமே அதற்குக் கார­ணம்.

இந்­நி­லை­யில் தடுப்­பூசி போட்டுக் ­கொண்­டால் பரி­சு­கள் வழங்­கப்­படும் என்று பல்­வேறு மாவட்­டங்­களில் அறி­விப்­பு­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

அந்த வகை­யில் நேற்று திரு­வேற்­காடு சிறப்பு முகா­மில் தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­ளும் அனை­வ­ருக்­கும் பரிசு என்று நக­ராட்சி ஆணை­யர் அறி­வித்­தி­ருந்­தார்.

திரு­வேற்­காடு நக­ராட்­சி­யில் மொத்­த­முள்ள 18 வார்­டு­களில் 24 இடங்­களில் கொரோனா தடுப்­பூசி சிறப்பு முகாம் நடை­பெற்­றது.

திரு­வேற்­காடு நக­ராட்­சி­யில் 18 வய­திற்கு மேற்­பட்­டோர் 85 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டு உள்­ள­னர்.

இத­னால் மீத­முள்ள 15 விழுக்­காட்­டி­ன­ருக்கு அதி­ரடி இல­வச பரி­சு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த வாரம் நடை­பெற்ற தடுப்­பூசி முகா­மில் தடுப்­பூசி செலுத்­திக் கொண்­ட­வர்­க­ளுக்கு 'மிக்ஸி', 'கிரைண்­டர்' போன்ற பரிசுப் பொருட்­கள் குலுக்­கல் முறை­யில் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்றைய முகா­மில் தடுப்­பூசி போட்ட அனை­வ­ருக்­கும் பரிசு என்று அறி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!