சென்னை தனியார் கல்லூரியிடமிருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சோழிங்­க­நல்­லூர்: சென்­னை­யில் தனி­யார் கல்­லூரி ஆக்கிரமித் திருந்த ரூ.2,000 கோடி மதிப்­புள்ள நிலத்தை தமி­ழக அரசு மீட்­டுள்­ளது.

சோழிங்­க­நல்­லூர் அடுத்த செம்­மஞ்­சேரி ராஜீவ்­காந்தி சாலை­யில் தனி­யார் கல்­லூரி ஒன்று இயங்கி வரு­கிறது.

இந்­தக் கல்­லூரி அங்­குள்ள 91 ஏக்­கர் பரப்பளவுள்ள அரசு நிலத்தை கப­ளீ­க­ரம் செய்­தி­ருந்­தது.

அதில் கட்­டடங்­களும் கட்­டப்­பட்டு இருந்தன. இதன் தற்­போதைய மதிப்பு ரூ.2,000 கோடி எனக் கூறப்படுகிறது. இது தொடர்­பான வழக்கை விசா­ரித்த செங்­கல்­பட்டு நீதி­மன்றம் நிலத்தை மீட்க அர­சுக்கு உத்­த­ர­விட்­டது. இதை­ய­டுத்து சனிக்­கி­ழமை அன்று அந்த நிலம் அதி­ர­டி­யாக மீட்­கப்­பட்­டது.

இதனை வரு­வாய்த்­துறை அமைச்­சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்­சந்­தி­ரன், அமைச்­சர் மா. சுப்பி­ர­ம­ணி­யன், தென்­சென்னை எம்.பி. தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன், சோழிங்­க­நல்­லூர் எம்.எல்.ஏ. அர­விந்த் ரமேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜ­ய­ராணி மற்­றும் அதி­கா­ரி­கள் நேரில் பார்­வை­யிட்­ட­னர்.

அந்த இடத்­தில் கட்­டப்­பட்ட கட்டடங்­கள் பொக்­லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்­பட்­டன.

இந்த விவகாரம் குறித்து ேபசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழக அரசுக்குச் சொந்தமான 91 ஏக்கர் நிலங்களை ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. இந்த நிலத்தின் மீதான வழக்கில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசுக்குச் சாதகமானத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.2,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு களுக்கு மேலாக இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன,” என்றார். இதற்கிடையே ஆக்கிரமிப்பு செய்த நிலங்களைக் கண்டறிய அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!