செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
60cf3875-0d7c-40ff-8db8-a1b649ff0645
-

சீமான் கட்சியின் முதல் பட்டியல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சியினரின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை சீமான் வெளியிட்டுள்ளார். அதில், இந்தத் தேர்தலில் அவரது நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இது தொடர்பாக வெளியிடுள்ள அறிக்கையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக அமைந்தது. இந்த சூழலில் வரவிருக்கும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் மக்களையும் உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து நாம் தமிழர் கட்சி களமிறங்கியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொறுப்பாளர்கள்

சென்னை: வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் நான்கு பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடுகற்கள் கண்டுபிடிப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைக்குன்று பகுதியில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இதில், மண்ணில் புதைந்த நிலையில் இருந்த ராணி மங்கம்மாள் தோற்றம் கொண்ட சிற்பத்துடன் கூடிய நடுகல்லையும் வேட்டை சமூகம் இந்தப் பகுதியில் வாழ்ந்ததற்கான அடையாளமாக வேடன், வில் அம்புடனும் அவரது மனைவி மற்றும் வேட்டையாடும் விலங்குகள் கொண்ட நடுகல் தமிழ் கல்வெட்டுகளுடன் கண்டறியப்பட்டுள்ளன.