முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டின் பின்புறம் 551 யூனிட் மணல்; ஆட்சியரிடம் அறிக்கை

சென்னை: அதி­மு­க­வைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர் கே.சி.வீர ­ம­ணி­யின் வீட்­டில் 551 யூனிட் மணல் உள்­ளது என திருப்­பத்­தூர் ஆட்­சி­ய­ரி­டம் கனி­ம­வ­ளத்­துறை அறிக்கை சமர்­ப்பித்­துள்­ளது.

கடந்த 16ஆம் தேதி ஜோலார் பேட்­டை­யில் உள்ள அதி­முக முன்­னாள் அமைச்­சர் கே.சி.வீரமணி­யின் வீட்­டில் லஞ்ச ஒழிப்­புத்­துறை அதிகாரிகள் சோதனை நடத்­தி­னர்.

இதில், கே.சி.வீர­ம­ணி­யின் வீட்­டில் மணல் கொட்­டப்­பட்­டி­ருப்­பது குறித்து கனி­ம­வ­ளத்­து­றைக்கு லஞ்ச ஒழிப்­புத்­துறை தக­வல் கொடுத்­தது. இதை­ய­டுத்து, கே.சி.வீர­மணி வீட்­டிற்­குச் சென்ற கனி­ம­ வ­ளத்­துறை அதி­கா­ரி­கள், வீட்­டின் பின்­பு­றம் கொட்டி வைக்­கப்­பட்ட மணலை அள­வீடு செய்­த­னர். அப்­போது 551 யூனிட் மணல் இருப்­பது தெரிய வந்­தது. இதை­ய­டுத்து மண­லின் மதிப்பு சுமார் ரூ.33 லட்­சம் என்று திருப்­பத்­தூர் ஆட்­சி­ய­ரி­டம் தாக்­கல் செய்­யப்­பட்ட அறிக்கையில் கனி­ம­வ­ளத்­துறை தெரி­வித்து உள்­ளது. இந்த அறிக்­கையைத் தொடர்ந்து எதற்­காக மணல் கொட்டி வைக்­கப்­பட்­டுள்­ளது, அதற்­கு­ரிய ஆவ­ணங்­கள் இருக்­கின்­ற­னவா என விசா­ரணை நடை­பெறவுள்­ளது. ஆவ­ணங்­கள் இல்­லா­த­பட்­சத்­தில் சட்­ட­வி­ரோத மணல் பதுக்­கல் பிரி­வின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­ப­ட­லாம் எனத் தெரி­கிறது. திமுக ஆட்­சிக்கு வந்­த­தும் ஊழல் புரிந்த அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர்­கள் மீது வழக்­குப்­ப­திவு செய்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­ அ­றி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி அண்­மை­யில் முன்­னாள் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர், முன்னாள் உள்­ளாட்­சித் துறை அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி ஆகி­யோ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு சொத்­துக்குவிப்பு, முறை­கேடு வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!