எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதி­மு­க­வில் ஒருங் கிணைப்­பா­ளர், இணை ஒருங் கிணைப்­பா­ள­ரின் நிய­ம­னம் செல்­லும் என்று சென்னை உயர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

"அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் நிய மனப் பத­வி­க­ளுக்­கான தீர் மானத்தை ஏற்று அதற்­கான உத்­த­ரவை தேர்­தல் ஆணை­யம் பிறப்­பித்­தது. அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்சி நிர்­வா­கி­கள் எடுத்த முடிவை தேர்­தல் ஆணை­யம் ஏற்­ற­தில் தவ­றில்லை," எனக் கூறி ஓபி­எஸ், இபி­எஸ்­ஸின் பத­வி­க­ளுக்கு எதி­ரான வழக்கை முடித்­து­வைத்து சென்னை உயர் நீதி­மன்­றம் நேற்று உத்­தரவிட்­டது.

தமி­ழ­கத்­தின் மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்­குப் பிறகு அதி­மு­க­வின் ஒருங்­கி­ணைப் பாள­ராக ஓ.பன்­னீர்­செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சாமி நிய­ம­னம் செய்­யப்­பட்­ட­னர். இந்த நிய­ம­னம் குறித்த அறி­விப்பை எடப்­பாடி பழ­னி­சாமி வெளி­யிட்டு, அக்­கட்­சி­யில் இனி பொதுச் செய­லா­ளர் பதவி கிடை­யாது என்­றும் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், ஓபி­எஸ், இபி­எஸ் நிய­ம­னப் பத­வி­களை தேர்­தல் ஆணை­யம் ஏற்றுக்ெகாண்டு அதற்­கான உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது.

இந்த உத்­த­ரவை ரத்து செய்­யக் கோரி அதி­முக உறுப்­பி­ன­ரும் வழக்­க­றி­ஞ­ரு­மான ராம்­கு­மார் ஆதித்­தன் என்­ப­வர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­தார்.

இதனை விசாரித்த நீதி­மன்­றம், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­சி­யின் நிய­மனம் பற்­றிய தேர்­தல் ஆணைய உத்­த­ரவு செல்­லும் என்று தெரிவித்­துள்­ளது. அதி­மு­கவைக் கைப்­பற்ற சசிகலா பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், சென்னை உயர் நீதிமன்­றத்­தின் இந்த உத்­த­ரவு, ஓ.பன்­னீர்­செல்­வம், பழனிசாமி ஆகி­யோ­ருக்கு சாதக மாகியுள்­ள­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கருத்து கூறி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!