சென்னை: மத்திய அரசு மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயல் படுவதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்தப் போராட்டம் நேற்றில் இருந்து 11 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாகவும் இக்கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடு வதைத் தவிர்க்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்கள் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய பாஜக மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு, நீட்தேர்வுக்கு விலக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட அம்சங் களை முன்னிறுத்தி திமுக தலைமை யிலான கூட்டணிக் கட்சிகள் நேற்று கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தின.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொளி வழி நடைெபற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 11 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன.
அதன்படி, நேற்று முதல் தொட ரும் இப்போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.