சேலம்: தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
எட்டு கோடி மக்கள் தொைக யைக் கொண்ட மாநிலத்தில், இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோ ருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.
சேலத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் அனை வரின் எண்ணமாக உள்ளது. அப்படியே, ஒரு வேளை இந்த அலை வந்தாலும் அதையும் சமாளிப்பதற்குத் தமிழக அரசு தயாராகவே உள்ளது," என்றார்.
கடந்த 12ஆம் தேதி முதல் கட்டமாக நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஏறத்தாழ 29 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் மூன்றாவது அலை தொடங்கலாம் என்ற அச்சம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தக் கிருமியை அதிகம் தொற்றவிடாமல் தடுக்க அடுத்த மாதத்திற்குள் முதல் தவணை தடுப்பூசியை அனைவருக்கும் போட்டுவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசிகளை அதிகமாக உடனே வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

