வேலையிழப்பு அச்சம் நீங்கியதில் ஏறத்தாழ 45,000 ஊழியர்கள் மகிழ்ச்சி கார்கள் தயாரிப்பை மீண்டும் தொடங்கியது ஃபோர்டு நிறுவனம்

2 mins read
b71872f6-4e3b-4a67-befa-a1f1d64ce00c
சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில், கார் உற்பத்தியை மீண்டும் துவக்கியுள்ளது ஃபோர்டு நிறுவனம்.வேலையிழப்பு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் இருந்த ஊழியர்கள் இப்போது நிம்மதியாக கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: சென்னை மறை­மலை­ ந­க­ரில் உள்ள தொழிற்சாலை­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த கார் தயாரிப்புப் பணியை மீண்­டும் தொடங்கியுள்ளது ஃபோர்டு நிறு­வ­னம்.

இத­னால், வேலை வாய்ப்பை இழக்­கக்­கூ­டிய அச்­சத்­தில் இருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்­ள­னர்.

கொரோனா உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால் எதிர்­பார்த்த அளவு விற்­பனை இல்­லா­த­தால் கார் உற்­பத்­தி தொழிற்சாலையை மூடிவிட்டு இந்தியாவில் இருந்து வெளி­யேறு­ வ­தாக கடந்த 9ஆம் தேதி அறி­வித்தது ஃபோர்டு நிறு­வ­னம்.

இந்தச் செய்தி, இந்நிறுவனத்தை நம்­பி­யிருந்த 4,000 நிரந்­தர, ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்­கும் 40 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மறை­முகத் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் பேரதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

கடந்த ஒரு­வா­ர­மாக உற்­பத்­தி­யும் நிறுத்­தப்­பட்­டதால், வேலை இழப்பு ஏற்படாமல் தடுக்கக் கோரி ஃபோர்டு தொழிற்சங்கத்தினர் மறைமலை நகர் தொழிற்சாலை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவ­கா­ரம் தொடர்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்­சர்­கள், அதி­காரிகளு­டன் ஆலோ சனை நடத்தியதாகவும் தகவல்கள் கூறின.

இந்நிலையில், இப்போது ஊழி யர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தக­வல் ஒன்றை ஃபோர்டு நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்­ளது.

"இது­வரை பெற்ற 'ஆர்­டர்'­களின்படி 30,000க்கும் அதி­க­மான கார்­களை ஏற்­று­மதி செய்ய வேண்டிய அவசியம் இருப்­ப­தால் இன்­னும் பல மாதங்களுக்கு மறை­மலை­ந­கர் தொழிற்சாலை­யில் உற்­பத்தி நடை­பெ­றும்," என தெரி­வித்துள்ளது.

இத்­த­க­வலால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சற்றே நிம்மதி அடைந் தாலும் தமிழக அர­சும் இதர அர­சி­யல் கட்­சி­களும் தங்­க­ளது வாழ்வாதாரத்தைக் காப்­ப­தற்­கான தொடர் நட­வ­டிக்­கை­களையும் எதிர் காலம் பாதிக்கப்படாமல் இருப்பதற் கான நிரந்தரத் தீர்வையும் காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.