வழக்கநிலை திரும்பியது; 200 விமானங்கள் பறந்தன

வழக்கநிலை திரும்பியது; 200 விமானங்கள் பறந்தன

1 mins read
c74c4f46-3ab0-4702-8b8e-43b96336b110
உள்நாட்டுப் பயணங்கள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிற்கின்றனர்.படம்: ஊடகம் -

மீனம்பாக்கம்: சென்னை உள்­நாட்டு விமானப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஏழு மாதங் ­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் அதி­க­ரித்­துள்­ள­தாக விமான நிலைய அதி­கா­ரி­கள் கூறியுள்­ள­னர்.

அதேபோல், சென்­னை­யில் இருந்து வெளிமாநி­லங்­க­ளுக்கும் வெளி மாநி­லங்­களில் இருந்து சென்­னைக்­கும் வந்து செல்லும் விமானச்சேவைகளும் இயல்பு நிலைக்­குத் திரும்­பி­யுள்­ள­தாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மீனம்­பாக்­கம் உள்­நாட்டு விமான நிலை­யத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் கார­ண­மாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்­றுக்கு 60 முதல் 70 விமா­னங்­களில் 2,000 முதல் 3,000 பய­ணி­களே பயணம் வந்து திரும்பியுள்ளனர்.

இந்­நி­லை­யில், கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் இருந்து உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்­ணிக்கையும் விமா­னச் சேவை க­ளின் எண்ணிக்­கை­யும் அதி கரித்தது. 180 விமானங்களில் ஏறத்தாழ 18,000 போ் வரை பய­ணம் செய்­துள்­ள­னர்.

ஆனால், இந்த செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று­முன்­தி­னம் ஒரே நாளில் மட்டும் இவ்விமான நிலை­யத்­தில் இருந்து 31 நக­ரங்­க­ளுக்கு 200 விமா­னங்­களில் மொத்­தம் 23,217 போ் பய­ணம் செய்துள்ளனா்.

பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பால் டெல்லி, மும்பை, ஹைத­ரா­பாத், பெங்­க­ளூரு உள் ளிட்ட நக­ரங்­க­ளுக்குக் கூடு­தல் விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. கொவிட்-19 தடுப்­பூசி, விழிப்­பு­ணர்வு கார­ண­மாக விமானப்பய­ணங்­கள் அதி­க­ரித்து உள்­ளன.

டிசம்­பர் மாத இறு­திக்­குள் இச்சேவை 300க்கும் மேல் அதிக மாகும் என்று தெரிகிறது.