நாமக்கல்: பள்ளிப்பாளையம் கிராமத்தில் நள்ளிரவில் காதலியுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஆடவர், கிணற்றில் தவறி விழுந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக தத்தளித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர்.
இளைஞருக்கு கை முறிவு ஏற்பட்டதால் பள்ளிப் பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவாரூர் மாவட்டத் தைச் சேர்ந்தவர் ஆஷிக். இவர், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நூற்பாலையில் பணி புரிந்து வருகிறார். அவர் அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், நூற்பாலை அருகே இருக்கும் கிணறு அருகே நடந்துகொண்டு காதலி யுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் தவறுதலாகக் கிணற்றில் விழுந்துவிட்டார்.
சுமார் 10 மணி நேரமாக கிணற்றுக்குள் தத்தளித்த நிலையில், காலையில் இளைஞரின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஆஷிக்கை மீட்டனர்.

