மீண்டும் தலைகாட்டும் தொற்று: நான்கு மாவட்டங்களில் பரவல்

மீண்டும் தலைகாட்டும் தொற்று: நான்கு மாவட்டங்களில் பரவல்

2 mins read
67adca44-a982-4a81-8a8c-10a18a6161f0
கொரோனா மூன்றாம் அலை உருவெடுக்கும் என்ற அச்ச நிலையில் பொதுமக்களிடம் அலட்சியம் காணப்படுகிறது. உத்தரப் பிரதேசத் தின் காஸியாபாத் நகரில் நேற்றுக் காலை ரயில் ஒன்றில் இவ்வாறு நெருக்கமாகப் பயணம் செய்தனர். முகக்கவசம் அரிதாகக் காணப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று இரண்டாம் அலை மே மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறைய குறைய, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கடும் கட்டுப்பாடுகள் காரணமாகத் தினசரி கிருமிப் பாதிப்பு சில வாரங்களில் 30 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் குறைவாக மாறி உள்ளது. ஆனால் 1,500 முதல் 1,700 என்கிற அளவில் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா குறைந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் சரியவில்லை.

100 முதல் 200 என்கிற அளவில் உள்ளது. அதேநேரம் மெதுவாக மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. ஆனால் அந்த வளர்ச்சி மெதுவாக உள்ளது. இது புதிய 3வது அலைக்கான போக்கைக் காட்டவில்லை எனினும் கொரோனா முறியடிப்புக்கு பொருத்தமான நடத்தை விதிகளை பின்பற்றி நடப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்

கொவிட்-19 தரபு பகுப்பாய்வாளர் விஜய ஆனந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பாதிப்பு அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், "தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களில் புதிதாகப் பாதிக்கப்

படுவோரின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி 1,52,493 பேருக்கு நடத்திய சோதனையின் முடிவில் 1,661 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1.1%. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,984. அதிகபட்சமாக சென்னையில் 206, கோவையில் 211, ஈரோட்டில் 117, செங்கல்பட்டில் 111 என தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.