கோடநாடு மர்மம்: உயிரிழந்த தினேஷின் தந்தையிடம் மூன்று மணி நேரம் விசாரணை

கோடநாடு மர்மம்: உயிரிழந்த தினேஷின் தந்தையிடம் மூன்று மணி நேரம் விசாரணை

1 mins read
7f154127-cf65-4249-9d04-6f1fb5d0f46b
-

ஊட்டி: கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொல்லப்பட்டார். அங்கு கணினி இயக்குநராகப் பணிபுரிந்த தினேஷ் அந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில், இவ்வாண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஐந்து மணி நேரம் வழக்கின் முக்கிய நபரான சயானிடம் விசாரணை மேற்கொண்டு அதனை காணொளியில் பதிவு செய்தனர். அதன்பின், பலரிடம் நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தினேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது தந்தை போஜனிடம் நேற்று மறுவிசாரணை தொடங்கியது. தினேஷ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு யாரேனும் நெருக்கடி கொடுத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோத்தகிரி கெங்கரை கிராமத்தில் அவரது தந்தை போஜனிடம் தனிப்படையைச் சேர்ந்த உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.