பள்ளி ஆசிரியர் ரூ.1 கோடி மோசடி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொளத்துபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜசேகர், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் ரூ.1 கோடி வரை பணம் பெற்றுள்ளார். அப்போது போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலு
வலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் 40க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆபாசப் படம் எடுத்த அரசு ஊழியர்
ஈரோடு: சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில், மூத்த வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக பெண் ஊழியர் களை அவர்களுக்குத் தெரியாமல் கைபேசியில் படம் பிடித்து, டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இதில் பாதிக்கப் பட்ட ஒரு பெண் ஊழியரின் பெற்றோர், இணையக் குற்ற போலிசாரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணைக்கப் பின் சதீஷ் குமாரைக் கைது செய்த போலிசார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, ஈரோடு கிளைச் சிறையில் அடைத்த னர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கோயில்களில் சாப்பாடு
சென்னை: தமிழகக் கோயில்களில் பக்தர்களின் வருகை அதிகரிப்பின் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கோயில்களில் அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம்தேதி முதல் கோயில்களில் உள்ள அன்னதான மண்டபங்களைத் திறந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கி உள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் அன்னதானம் மீண்டும் வழங்கப்படுகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சென்று சாப்பிட்டு வருகின்றனர்.

